அது இல்லாம கல்யாணமா.. மேடையில் வெறுப்பான மாப்பிள்ளை.. போர்க்களமான திருமண வீடு..

திருமண நிகழ்வு என்றாலே நமது சொந்த பந்தங்களையும், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து மிக அற்புதமாக அந்த தருணத்தை மாற்றுவது என்பது தான். ஊரில் ஒரு திருமண விழா வந்து விட்டாலே அப்படி…

up marriage

திருமண நிகழ்வு என்றாலே நமது சொந்த பந்தங்களையும், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து மிக அற்புதமாக அந்த தருணத்தை மாற்றுவது என்பது தான். ஊரில் ஒரு திருமண விழா வந்து விட்டாலே அப்படி ஒரு அமர்க்களமான இடமாகவும் அவை மாறி விடும்.

இந்த தினத்தில் தனியாக அதுவரை வாழ்ந்து வந்த இரண்டு பேர் திருமணத்தின் மூலம் தங்களின் வாழ்வின் அடுத்த ஒரு கட்டத்தையும் ஆரம்பிக்க உள்ள சூழலில் அந்த நாளே என்றென்றும் மறக்க முடியாத தினமாக இருக்கும். ஆனால் அதே வேளையில் இந்த திருமண நாள் நாம் எதிர்பாராதது போது நடைபெறாமல் அதில் ஏதாவது தவறான எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று அப்படியே மொத்த தினத்தையும் திருப்பி போடும் நிகழ்வுகளும் நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து மணப்பெண்ணோ, மணமகனோ திருமணம் வேண்டாம் என முடிவு செய்வதும் அல்லது அங்கே நடைபெறும் ஏதாவது தகராறு காரணமாக திருமணம் பாதியில் நின்று போன அசம்பாவித சம்பவங்களை பற்றியும் நிறைய கடந்து வந்திருப்போம்.

அப்படி ஒரு சூழலில் தான் கிட்ட தற்போதும் அதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உத்தர பிரதேச மாநிலம் தியோரியா என்னும் பகுதியில் சமீபத்தில் அபிஷேக் ஷர்மா என்பவருக்கும், சுஷ்மா என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான நிகழ்ச்சிகளும் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத சம்பவம் அரங்கேறி உள்ளது.

அபிஷேக் மற்றும் சுஷ்மா ஆகிய இருவரும் மாலை மாற்றியதற்கு பின்னர் மாப்பிள்ளை வீட்டார் அங்கே உணவருந்த சென்றுள்ளனர். ஆனால் அங்கே சைவ உணவுகள் மட்டுமே இருந்ததால் அவர்கள் கோபத்தில் கொந்தளிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. மீன், ஆடு உள்ளிட்ட எந்த வித அசைவ உணவுகளும் அங்கே இல்லாததால் அவர்கள் முதலில் பிரச்சனையை தொடங்க இதை தெரிந்து மாப்பிள்ளையான அபிஷேக் சர்மாவும் பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

திருமண வீடும் ஏதோ பிரச்சனை நடந்த இடமாக களேபரமாக மாறி இருந்தது. இது தொடர்பாக மேலும் வெளியான தகவலின் படி மணமேடையில் இருந்த பெண்ணிடம் அபிஷேக் சர்மா என்ன உணவு என்று கேட்டதாகவும் அதற்கு அசைவம் இல்லை என கூறியதும் அந்த மணமகளை அடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மணப்பெண்ணின் வீட்டார் உள்ளிட்டவரையும் அபிஷேக் சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்க, இந்த சம்பவமே மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனைத்தையும் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.