அதன் பிறகு, காலை உணவு வழங்கப்படுகிறது. அங்கு, பல்வேறு வகையான உணவுகள், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் உணவுகளைப் போல் அமைந்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு, விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். அங்கு, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட உள் விளையாட்டுகள் மற்றும் வெளி விளையாட்டுகள் உள்ளன.
இதனைத் தொடர்ந்து, அவர் தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பணியாற்ற ஆரம்பிக்கிறார். ஆனால், பணி செய்யும் இடம் ஒரு அலுவலகம் போல இல்லாமல், வித்தியாசமான டூரிஸ்ட் சென்டர் போலவே அமைந்துள்ளது. அதன் பிறகு, அவர் மதிய உணவு சாப்பிடுகிறார். உணவு வாங்கும் பகுதியில், ஏராளமான உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவர் தனக்குப் பிடித்ததை எல்லாம் எடுத்துக் கொண்டு சாப்பிடுகிறார்.
இதனை அடுத்து, ஓய்வுக்காக ஒரு பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு, சிறிய மெத்தையுடன் கூடிய படுக்கை உள்ளது. அதில், அவர் சில நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். பின்னர், பல்வேறு இசைக்கருவிகள் உள்ள இடத்திற்கு சென்று அவற்றை வாசிக்கிறார்.
இறுதியாக, அவர் மசாஜ் சென்டருக்குச் செல்கிறார். அங்கு, உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும் வகையில் மசாஜ் செய்து கொள்கிறார். இதற்குப் பிறகு, வீடு செல்லும் போல வீடியோவின் காட்சிகள் அமைந்துள்ளன.
இந்த வீடியோவை பார்த்தவர்கள், “இது கூகுள் அலுவலகமா? அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலா?” என்று ஆச்சரியத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும், “இப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!” என்று பலரும் கருத்து கூறியுள்ளனர்.