இந்திய இளைஞர்கள் தற்போதைய வருமானத்திற்காக உணவு டெலிவரி நிறுவனங்களிடம் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் மின்சார போக்குவரத்து, பேட்டரி தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும், சீனாவைப் போலவே இந்திய இளைஞர்களும் ஆக்கபூர்வமான ஸ்டார்ட் அப் துறையை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகிலேயே மூன்றாவது பெரிய ஸ்டார்ட் அப் சூழல் கொண்ட நாடாக இந்தியா இருந்தாலும், அதை நாம் பெருமையாக கூறிக்கொள்ள முடியாது என்றும், “உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் நாடாக மாறிவிட்டோமா?” என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாகும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் டிப் டெக் ஸ்டார்ட் அப் தொழில்நுட்பங்கள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இ-காமெர்ஸ் மற்றும் ஃபுட் டெலிவரி செய்யும் வேலையை இந்திய இளைஞர்கள் விட்டு விட்டு தொழில்நுட்பத் துறையை நோக்கி முயற்சிக்க வேண்டும் என்றும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப்புகள் மூலம் டெக்னாலஜியில் புதிய புரட்சி ஏற்படுத்த, இந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தற்காலிகமாக முப்பதாயிரம் அல்லது நாற்பதாயிரம் வருமானம் கிடைப்பதால் எந்தவொரு டெலிவரி நிறுவனத்திலும் சிக்கிக் கொள்ளாமல், எதிர்கால கனவை நோக்கி இந்திய இளைஞர்கள் செல்ல வேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.