மிகப்பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிப்பு.. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் ஒடிசா..!

  ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆய்வில் இருந்து உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாநிலமாக ஒடிசா மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர்,…

gold

 

ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆய்வில் இருந்து உறுதி செய்யப்பட்டால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாநிலமாக ஒடிசா மாறும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர், நபரங்க்பூர், அங்குல், மற்றும் கொராபுட் ஆகிய மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதாகவும், ஆய்வுகள் மூலம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் மேயூர்‌பஞ்ச் மாவட்டத்தில் ஜாஷிபூர், சுரியகுடா, ரூவான்சி, இடேல்குசா, மாரேடிஹி, சுலெய்பட், மற்றும் பதம்பஹாட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவில் தங்கம் இருப்பது உறுதியாக மாறினால், ஒடிசா மாநிலம் பொருளாதாரத்தில் வரலாற்று சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த தங்கச் சுரங்கம் ஏலத்துக்கு வரவிருக்கிறது, இது கனிமத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தற்போது ஆரம்பகட்ட ஆய்வில், தங்கம் மற்றும் செம்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் கூடுதல் ஆய்வுகளின் முடிவுகள் வெளிவரவுள்ளன.

அந்த ஆய்வுகளில் நேர்மறையான முடிவுகள் வந்தால், ஒடிசா மாநிலத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டு மற்றும் வெளி மாநில முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அளவிற்கு இந்த கண்டுபிடிப்பு தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, விரைவில் ஒடிசா மாநிலம் இந்தியாவின் முக்கிய தங்க உற்பத்தி மாநிலமாக மாறும் எனவும், நம்பர் ஒன் பணக்கார மாநிலமாக வளரக் கூடும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.