ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பைசரான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தானை நோக்கிய மிகப்பெரிய டிஜிட்டல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவை, அதன் இராணுவத்தையும், பாதுகாப்புப் படையினரையும் எதிர்த்து தவறான தகவல்களை மற்றும் மத வேறுபாடுகளை தூண்டும் விதமாக செய்திகளை பரப்பியதாக கூறப்படும் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.
இந்த நடவடிக்கை, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சேனல்களில் முக்கியமான பாகிஸ்தானின் செய்தி நிறுவனங்கள் மற்றும் தனிநபர் யூடியூப் சேனல்கள் அடங்கும்.
தடை செய்யப்பட்ட முக்கிய சேனல்கள் பட்டியல்:
Dawn News
Samaa TV
ARY News
Geo News
Irshad Bhatti
BOL News
Raftar
The Pakistan Reference
Uzair Cricket
Umar Cheena Exclusive
Asma Shirazi
Muheeb Farooq
SUNO News
Razi Naama
GNN
Samaa Sports
இதற்குப் போக, பாகிஸ்தானை சேர்ந்த பிரபல யூடியூபர்களான அர்சூ காஸ்மி, சயித் முஸம்மில், ஃபுர்கான் பட்டி, ஷொயப் அக்தர், பாசித் அலி ஆகியோரின் தனிப்பட்ட சேனல்களும் இந்திய டிஜிட்டல் தளங்களில் தடை செய்யப்பட்டுள்ளன.
யூடியூப்பில் இச்சேனல்களை தேடியால், “இந்த நாட்டில் இந்த உள்ளடக்கம் தற்போது கிடைக்கவில்லை. இது தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு காரணமாக அரசின் உத்தரவின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது” என்ற சிவப்பு நிற அறிவிப்பு தோன்றுகிறது. மேலதிக தகவலுக்கு கூகுளின் தெளிவுத்தன்மை அறிக்கையை பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மீது ஆயுத அட்டாக் தொடங்குவதற்கு முன் இந்த சைபர் அட்டாக்கை வெற்றுகரமாக இந்தியா செய்துள்ள நிலையில் இதற்கே பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கண்ட சேனல்களுக்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியா தடை விதித்துள்ளதால் இதன் வருமானம் மற்றும் பார்வையாளர்கள் மிகப்பெரிய அளவில் குறைந்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.