எட்டு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் கணவரது வீட்டினரால் வெறுக்கப்பட்டு, தாய் வீட்டில் வாழ்ந்து வந்த பெண் ஒருவர், கர்ப்பிணி ஆனது போல் நடித்த நிலையில், அவர் செய்த ஒரு திடுக்கிடும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த 27 வயது பெண், திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆக, குழந்தை இல்லை என்பதால் கணவர் மற்றும் குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டார். இதனை அடுத்து, சில மாதங்களாக தாய் வீட்டில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது. கணவர் அவ்வப்போது அவரை பார்த்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தான், கர்ப்பமானதாக தாயை மட்டும் இன்றி கணவர் வீட்டையும் நம்ப வைத்த அந்த பெண், போலியாக கர்ப்பிணி போல் கடந்த 10 மாதங்களாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், தனக்கு தெரிந்த பெண் ஒருவர் கர்ப்பிணி ஆனதை தெரிந்துகொண்டு, அந்த பெண்ணுடன் அவர் வேற நெருக்கமாக பழக ஆரம்பித்தார். குழந்தை பிறந்த போதும், அவருக்கு உதவி செய்வது போல் நடித்தார்.
இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் கர்ப்பிணி போல் நடித்த பெண், அந்த குழந்தையை திருடி கொண்டு சென்றதாக தெரிகிறது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்த நிலையில், சிசிடிவி காட்சிகளின்படி, அந்த பெண்ணை கண்டுபிடித்தனர். துப்பட்டாவால் மூடியபடி குழந்தையை திருடி சென்ற அந்த பெண், ஒரு ஆட்டோவில் சென்றதை கண்டுபிடித்த நிலையில், ஆட்டோக்காரரை பிடித்து, போலீசார் விசாரித்து, அந்த குழந்தையையும் தாயையும் எங்கே இறக்கி விட்டார் என்பதை கண்டுபிடித்து, அந்த பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தை இல்லை என்பதால் தன்னை தன்னுடைய கணவர் வீட்டில் வெறுத்ததாகவும், இதனால் தான் கர்ப்பிணி போல் நடித்து, அதன் பின்னர் ஒரு குழந்தையை திருடியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.