13 வயதுக்குட்பட்டோர் இனி பேஸ்புக், எக்ஸ் பயன்படுத்த முடியாதா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்ன?

  13 வயதிற்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது ஒரு கொள்கை தொடர்பான விஷயம் எனவும், இந்த விஷயத்தில் சட்டமியற்ற வேண்டியது…

social media

 

13 வயதிற்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்ற வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இது ஒரு கொள்கை தொடர்பான விஷயம் எனவும், இந்த விஷயத்தில் சட்டமியற்ற வேண்டியது பாராளுமன்றத்தின் பொறுப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சமூக ஊடகங்கள் சிறார்களின் உடல், மன, உளவியல் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தீவிர பாதிப்புகளை குறிப்பிட்டு, குழந்தைகள் சமூக ஊடகங்களை அணுகுவதை கட்டுப்படுத்த வயது சரிபார்ப்பு முறைகளை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு, 13-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கட்டாய பெற்றோர் கட்டுப்பாடு (Parental Control) அம்சங்களை உருவாக்கும் அறிவிப்பை வழங்க வேண்டும் என கோரப்பட்டது. சமூக ஊடக நிறுவனங்கள் குழந்தைகள் பாதுகாப்பு விதிகளை மீறினால், கடுமையான தண்டனைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.

மேலும்ன் இந்தியா முழுவதும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகையான சமூக ஊடக பயன்பாட்டின் தீங்குகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த டிஜிட்டல் கல்வித் திட்டம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியாவில் சிறுவர்கள் அதிகளவில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால், மனச்சோர்வு, பதற்றம், தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் மனுவில் கூறப்பட்டது.

ஆனால் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் “இது ஒரு கொள்கை தொடர்பான விஷயம். பாராளுமன்றம் தான் இதுகுறித்த சட்டம் இயற்ற வேண்டும் குறினர்.

மனுதாரர் கேட்டபடி 13 வயதிற்கு குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை நேரடியாக தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்தாலும், இது பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டிய கொள்கை விஷயம் என தெரிவித்தது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.