இவரெல்லாம் ஒரு ஆசிரியரா? மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்.. eleven என்பதை “aivene” என எழுதிய ஆசிரியர்.. பிரதமர் பெயர் கூட தெரியாத மாணவர்கள்..!

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் “eleven,” “eighteen,” “nineteen” போன்ற எளிய ஆங்கில சொற்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாமல் திணறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பள்ளியில்…

teacher

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் “eleven,” “eighteen,” “nineteen” போன்ற எளிய ஆங்கில சொற்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாமல் திணறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பள்ளியில் நிகழ்ந்த இந்த சம்பவம், அப்பகுதியின் கல்வித் தரம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

ஆசிரியர்களின் அடிப்படை அறிவின்மை:

வைரலான வீடியோவில், தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட பள்ளி ஊழியர்கள், மிக அடிப்படையான கேள்விகளுக்கு கூட பதிலளிக்க முடியாமல் திணறுவது தெளிவாக தெரிகிறது. அதேபோல் இவர்களிடம் படிக்கும் குழந்தைகளிடம் பிரதமர் அல்லது முதலமைச்சரின் பெயரை கேட்டபோது அவர்கள் அமைதியாக இருந்தனர். அதேபோல் ஆசிரியர்களுக்கு தங்கள் சொந்த மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் கண்காணிப்பாளரின் பெயர் கூட தெரியவில்லை.

பல்ராம்பூர் மாநிலத்தின் தொலைதூர பகுதி அல்ல என்றும், பல அரசு கல்வி திட்டங்கள் அமலில் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம், அத்திட்டங்களின் பலன்கள் பள்ளிகளுக்கு சுத்தமாக சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது.

அந்த பள்ளியில் நடந்த திடீர் ஆய்வில் ஒரு ஆங்கில ஆசிரியரிடம் “eleven” மற்றும் “nineteen” ஆகிய எண்களின் எழுத்துகளை பலகையில் எழுத சொல்கிறார்கள். ஒரு ஆசிரியர் “eleven”க்கு பதிலாக “aivene” என்றும், “nineteen”க்கு பதிலாக “ninithin” என்றும் எழுதுகிறார். அதை பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, ​​தனது பதில்கள் சரியானவை என்று அவர் வலியுறுத்துவதுடன், அதே தவறான எழுத்துகளை முன்னால் இருக்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கிறார்.

இந்தக் காட்சிகள் மூலம் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் அடிப்படை ஆங்கில வார்த்தைகளை கூட எழுத்துக் கூட்டி எழுத முடியவில்லை என்பதும், இவர்களா நமது குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறார்கள்?” என்ற கவலையுடன் ஆன்லைனில் பகிரப்பட்டது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் எதிர்வினைகளை தூண்டியுள்ளது.

ஒரு பயனர், “இது அனைத்தும் இடஒதுக்கீடு காரணமாகத் தான், சகோதரா,” என்று கருத்து ஒருவர் கருத்து தெரிவிக்க, மற்றொருவர், “அந்த ஆசிரியர் வேலைநீக்கம் செய்யப்பட்டாரா?” என்று கேட்டார். இதற்கிடையில், மாவட்ட கல்வி அதிகாரி இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் மீண்டும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் தரமின்மை மற்றும் பலவீனமான பணி நியமன நடைமுறைகள் பற்றிய பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆசிரியர்களால் அடிப்படை விஷயத்தை கூட தெரிந்து கொள்ளா முடியாவிட்டால் அத்தகைய பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த கல்வி அமைப்பின் செயல்திறன் கேள்விக்குறியாகிறது. ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாரா அல்லது நீக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.