Atal Pension Yojana | மாதம் 10000 ரூபாய்.. மத்திய அரசு தரப்போகும் இன்ப அதிர்ச்சி.. பட்ஜெட்டில் இருக்கும் சர்ப்ரைஸ்?

Published:

டெல்லி: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் இணைந்து வரும் நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வண்ணம் மத்திய அரசு சூப்பர் முடிவினை எடுத்துள்ளது. இதன்படி மாதம் 10000 பென்சன் தரும் வகையில் திட்டத்தை மாற்ற மத்திய அரசு பரிசீலிக்கிறதாம். இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

Atal Pension Yojana – APY: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் பயனாளிகள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஒருவரின் முதலீட்டைப் பொறுத்து மாதம் ரூ. 5000 வரை பென்ஷனாகப் தற்போது பெற முடியும். இந்நிலையில் மாதம் 10000 வரும் வகையில் திட்டத்தைத மாற்ற அரசு பரிசீலித்து வருகிறதாம்.

சரி அடல் பென்ஷன் யோஜனா திட்டம் என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன தெரியுமா? அடல் பென்ஷன் யோஜனா திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2015-ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிமுகம் செய்த திட்டம் ஆகும். இதனை மறைந்த முன்னாள் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ஆரம்பித்து வைத்தார். இந்த திட்டத்தை பயன்படுத்தி இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் ஓய்வு காலத்திற்கு தேவையான வருமானத்தை பெற முடியும்,

18 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2015ம் ஆண்டு கொண்டு வந்த இந்த டல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணையும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவரின் முதலீட்டின் அடிப்படையில் குறைந்தது மாதம் ரூ. 1,000-த்திலிருந்து அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.

இந்த ரூ. 5,000 வரம்பை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 10,000 ரூபாயாக மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறதாம்.

வயதானவர்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று யோசிக்கும் அரசு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 23-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்க போகிறதாம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஜூன் 20, 2024 நிலவரப்படி, மொத்தமாக 6.62 கோடி பேர் இணைந்துள்ளனர், 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 1.22 கோடி பேர் இணைந்துள்ளனர். எனவே உத்தரவாத தொகையை 10000 ஆக அதிகரித்தால் கோடிக்கணக்கானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமாம்.

அடல் பென்ஷன் திட்டத்தில் இறப்பு அல்லது கடைசி கட்ட நோய் போன்ற சந்தர்ப்பங்களைத் தவிர, 60 வயதில் திட்டத்தில் இருந்து வெளியேறிக் கொள்ளலாம். அப்போது, முதலீடு செய்யப்பட்ட தொகை 100% ஓய்வூதியமாக மாற்றப்பட்டு வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்பவர்கள் ஓய்வூதிய காலத்திற்கு பிறகு பென்ஷன் பெறமுடியும். அதேநேரம் வருமான வரி செலுத்துவோர் இந்த திட்டத்தில் சேர முடியாது.

மேலும் உங்களுக்காக...