அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா.. ஆளுநரை சந்திக்கிறார்.. புதிய முதல்வர் குறித்து சஸ்பென்ஸ்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அளிப்பதறகாக கவர்னரை சந்திக்க இன்று அவர் நேரம் கேட்டுள்ளார். புதிய முதல்வர் யார் என்பது குறித்து…

Arvind Kejriwal resigned today and Suspense over Delhi's new chief minister

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார். ராஜினாமா கடிதத்தை அளிப்பதறகாக கவர்னரை சந்திக்க இன்று அவர் நேரம் கேட்டுள்ளார். புதிய முதல்வர் யார் என்பது குறித்து இப்போது வரை தெரியவில்லை. இதுபற்றி அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இன்று தெரியவரும் என கூறப்படுகிறது..

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்குகுளில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவ்வழக்கில் கடந்த 13-ந் தேதி உச்ச நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. ஆனால், தலைமை செயலகத்துக்கு செல்லக்கூடாது என்றும், கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்திருக்கிறது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

 

கடந்த 15-ந் தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். தன்னை மக்கள் நேர்மையாளன் என்று சொல்லும்வரை முதல்வர் பதவியை ஏற்க மாட்டேன் என்று அறிவித்தார். அத்துடன் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று அவரை முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சந்தித்து பேசினார். புதிய முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து அவர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர், மாலையில், கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி அரசியல் விவகாரக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. அதிலும், புதிய முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யார் டெல்லி முதல்வர் என்பது தெரியவில்லை.. ஏனெனில் புதிய முதல்வர் குறித்து அறிவிப்புகள் வெளிவரவில்லை..

அதேநேரம் டெல்லி மாநில அரசின் அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், சவுரவ் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், தனித்தொகுதிகளில் வெற்றி பெற்ற சில எம்.எல்.ஏ.க்கள், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா ஆகியோரின் பெயர்கள், புதிய முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன.

இதற்கிடையே, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டுள்ளார்.. இன்று மாலை 4.30 மணிக்கு சந்திக்க அவருக்கு கவர்னர் நேரம் ஒதுக்கி தந்திருக்கிறார். இச்சந்திப்பின்போது, கவர்னரிடம் கெஜ்ரிவால் ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து புதிய முதல்வர் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.