Amit shah on Ambedkar | அம்பேத்கரை அவமதித்தேனா.. உண்மைகளை திரிக்கிறார்கள்.. அமித்ஷா ஆவேசம்

டெல்லி: அம்பேத்கரை அவமதித்துவிட்டதாகவும் அமித்ஷாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம்…

amit shah on ambedkar: Congress distorting facts,' says Amit Shah on Ambedkar remark row

டெல்லி: அம்பேத்கரை அவமதித்துவிட்டதாகவும் அமித்ஷாவை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரானதாகவும், இட ஒதுக்கீடுக்கு எதிரானதாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கட்சியாகவும் இருக்கிறது என்றார்.

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் நேற்று இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்,”என்று கூறினார்.

இதையடுத்து அமித்ஷா அம்பேத்கரை அவமதித்து விட்டதாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டன. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

தாழ்த்தப்பட்டோரின் அடையாளமாகத் திகழும் பி.ஆர்.அம்பேத்கரை அவமதித்ததற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா மனிப்புக் கேட்பதுடன், பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே வலியுறுத்தியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கெடு விதித்து போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்த விவாகரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ ஆகியோர் சூழ டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பேசினார். அப்போது அவர் கூறுகையில். “நேற்று முதல் காங்கிரஸ் உண்மைகளை திரித்துக்கூறும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கருக்கு எதிரானதாக உள்ளது, இட ஒதுக்கீடுக்கு எதிரானதாக உள்ளது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

இதுதவிர காங்கிரஸ் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவமதிக்கிறது. அரசியமைப்பு சட்டத்தின் கொள்கைகளை காங்கிரஸ் படிப்படியாக அழித்து வருகிறது. பல ஆண்டுகளாக பெண்களுக்கான இட ஒதுக்கீடை ஓரங்கட்டி வந்தது. நீதித்துறையை அவமதிக்கிறது., ராணுவ தியாகிகளை அவமதிக்கிறது. நாட்டின் நிலத்தை வெளிநாடுகளுக்கு கொடுத்துவிட்டது,”என்று அமித்ஷா கூறினார்.