அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் 15 மணி நேரம் சோதனை.. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்..!

BIS என்று கூறப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் டெல்லி கிளை, நேற்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி, ஆயிரக்கணக்கான தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15…

raid

BIS என்று கூறப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் டெல்லி கிளை, நேற்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தி, ஆயிரக்கணக்கான தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சோதனையில் பல அதிர்ச்சி தகவல் கிடைத்ததாகவும் தெரிகிறது.

டெல்லியில் அமேசான் குடோனில் 3,500க்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பாக கீசர்கள், மிக்ஸிகள், மற்றும் பல்வேறு மின்சாதனங்கள் உள்ளிட்ட 3,500க்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் BIS அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனையில் பல பொருட்களுக்கு  ISI சான்றிதழ் இல்லை என்றும் பல அல்லது போலியான ISI லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ₹70 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஃப்ளிப்கார்ட் துணை நிறுவனம் ‘இன்ஸ்டாகார்ட்’ குடோனில் சோதனை செய்தபோது அங்கும், ISI தரநிலைகளை பூர்த்தி செய்யாத மற்றும் உற்பத்தித் தேதி விவரங்கள் இல்லாத ஸ்போர்ட்ஸ் காலணிகள் குவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் மொத்தம் 590 ஜோடி  ஷூக்களை பறிமுதல் செய்ததாகவும், அதன் மதிப்பு ₹6 லட்சம் எனவும் கணிக்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில், டெல்லி மட்டுமின்றி குருகிராம், பரிதாபாத், லக்னோ,  உள்ளிட்ட இடங்களில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, தரச்சான்று இல்லாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.