பத்மபூஷண் விருதை வென்றார் அஜித்குமார்… உருக்கமான செய்தியை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்தார்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். கார் ரேஸிங்கில்…

padma bhushan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்து வருபவர் அஜித் குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனக்கென தனி இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். கார் ரேஸிங்கில் ர்வம் கொண்டிருந்த அஜித்குமார் தனது 18-வது வயதில் கார் ரேஸில் பங்கேற்க ஆரம்பித்தார். அப்போது மாடலிங் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி அமர்க்களம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு கமர்சியல் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஆனார்.

அஜித் குமார் என்னதான் நடிக்க வந்தாலும் அவர் தனது கார் ரேஸிங்கை விடுவதில்லை. அவ்வபோது போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்த வருடம் கூட கார் ரேசிங்கில் பங்கேற்ற அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. அது தவிர இவர் நடித்த விடாமுயற்சி GoodBadUgly ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது.

இன்று இந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ பத்மபூஷன் விருதுகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. இது அறிந்தவுடன் அவர் மகிழ்ச்சியான மற்றும் உருக்கமான செய்தியை பகிர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் என் அப்பா கூட இருந்திருந்தால் எனக்கு நன்றாக இருந்திருக்கும் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் எனது ரசிகர்கள் நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் அனைவருக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன் என்று தனது மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.