சில அடி தூரத்தில் நடந்த கொலை.. குறட்டை விட்டு தூங்கிய காவல்துறை அதிகாரிகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

  சில அடி தூரத்தில் கொலை நடந்த நிலையில், பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். ஆனால், அதே அருகிலேயே காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம், குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில், இரவில்…

police

 

சில அடி தூரத்தில் கொலை நடந்த நிலையில், பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். ஆனால், அதே அருகிலேயே காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்த சம்பவம், குஜராத் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில், இரவில் ரோந்து செல்லும் காவல்துறை வாகனத்தில் இருந்த அதிகாரிகள் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பக்கத்திலேயே சில அடி தூரத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு இளைஞர்களை தாக்கினர். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்னொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த கொலையால், அந்த பகுதி மக்கள் கடும் பரபரப்படைந்தனர். அத்துடன், இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து வெறும் சில அடி தூரத்தில் காவல் ரோந்து வாகனம் நின்று கொண்டிருந்தது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிகாரிகளை எழுப்பி கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் சமாளித்து, அந்த இடத்தை விட்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அகமதாபாத் போலீசார், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பொதுமக்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருப்பதால் தான், சமூக விரோதிகள் எளிதாக கொலை செய்கிறார்கள் என்று பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.