வாழ்நாள் முழுதும் காசு இல்லாமல் பானி பூரி சாப்பிடலாம்… புது யுக்தியை வைத்து வியாபாரம் செய்யும் பானி பூரி விற்பனையாளர்…

இன்றைய காலகட்டத்தில் வடநாட்டு உணவுகள் எல்லாம் தமிழ்நாட்டில் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மிக முக்கியமான ஒன்றுதான் பானிபூரி. இளைஞர்கள் மத்தியில் இந்த பானிபூரியன் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.…

pani puri

இன்றைய காலகட்டத்தில் வடநாட்டு உணவுகள் எல்லாம் தமிழ்நாட்டில் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அதில் ஒன்று மிக முக்கியமான ஒன்றுதான் பானிபூரி. இளைஞர்கள் மத்தியில் இந்த பானிபூரியன் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய பானி பூரி கடைக்காரர் புதிய ஒரு ஆஃபர் மூலம் தனது வியாபாரத்தை பெருக்க திட்டமிட்டு இருக்கிறார்.

நாகப்பூரை சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் தனது கடையில் ரூபாய் 99000 செலுத்தி விட்டால் வாழ்நாள் முழுவதும் அன்லிமிடெட் ஆக எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். எதற்கும் காசு தர வேண்டியது இல்லை என்ற புதுவித ஆஃபரை அறிவித்திருக்கிறார்.

தற்போது இவர் அறிவித்த இந்த ஆஃபர் ஆனது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஆனால் இவரைப் பற்றி பலவித கமெண்ட்ஸ்களும் வந்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், இவரை நம்பி எப்படி பணம் கொடுப்பது? பணத்தை வாங்கி விட்டு வேறு எங்காவது சென்று விடுவாரா? ஒருவர் ஒரு வாழ்நாளில் ஒரு லட்சம் பானி பூரி சாப்பிடுவாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்புகிறார்கள்.

மேலும் அப்படியே அதிகப்படியான பானிபூரியை விரும்பி சாப்பிடுவராக ஒருவர் இருந்தாலும் முன்னமே பணம் கொடுத்து விட்டால் அதிக பானிபூரி சாப்பிட தூண்டும். அது நிச்சயமாக உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று பலவித கமெண்ட்களை கூறி வருகின்றனர். ஆனாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தனது வியாபாரத்தை பெருக்குவதற்காக இப்படி ஒரு யுத்தியை பயன்படுத்தியிருக்கிறார் நாக்பூரை சேர்ந்த பானி பூரி விற்பனையாளர்.