பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் 60 வயது வரை திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், திடீரென தனது கட்சி தோழி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநில பாஜக தலைவராக இருக்கும் திலீப் கோஷ் என்பவர் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆக உள்ளார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இன்று கூட, அவர் மேற்குவங்க மாநிலத்தில் இந்துக்கள் அனைவரும் ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், திடீரென இன்று தனது கட்சி தோழியான ரிங்கு என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது. 60 வயது வரை திருமண வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்த அவர், திடீரென கட்சியின் தோழி ஒருவரை திருமணம் செய்ய இருப்பது, மேற்குவங்க மாநில பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இன்று திலீப் கோஷ் இல்லத்தில் இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட ஆளும் கட்சியினர் என அனைத்து தரப்பினரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
60 வயதில் தனது திருமண வாழ்க்கையை தொடங்கும் திலீப் கோஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கட்சியின் தொண்டர்களும் தெரிவித்து வருகின்றனர். அவரது திருமணம் பாஜக கட்சி மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
