பெரும்பாலும் அருவருக்கத்தக்க பேச்சு, வன்முறை, போலியான தகவல்கள் கொண்ட வீடியோக்களை யூடியூப் AI தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து நீக்குகிறது. குறிப்பாக ஸ்பேம் மூலம் வீடியோக்கள் அதிகமான பார்வைகளை பெறும் வீடியோக்கள் அகற்றப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு மீறல்கள், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வீடியோக்கள் மட்டும் 5 மில்லியனுக்கும் அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்டுள்ளன.
வீடியோக்கள் மட்டுமல்ல, யூட்யூபில் 4.8 மில்லியன் சேனல்களும் நீக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஸ்பாம் மற்றும் மோசடிகள் காரணமாக அகற்றப்பட்ட சேனல்களே அதிகம். ஒரு சேனல் நீக்கப்பட்டால், அதிலுள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்படும் என்பதால் மொத்தம் 54 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. வீடியோக்கள் நீக்கப்பட்டால் அதில் பதிவாகும் கமெண்டுகளும் நீக்கப்பட்டிருக்கும்.
யூட்யூப் தனது தளத்தை பாதுகாப்பாக வைத்திருக்க கடுமையான விதிமுறைகளை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் அதிகமான வீடியோக்கள் விதிமுறைகளை மீறி பதிவு செய்யப்பட்டு இருப்பதால் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமானம், அதிக பார்வையாளர்கள் காரணமாக தவறான வீடியோக்களை பதிவு செய்தால் சேனலே போய்விடும் என்பதை யூடியூபர்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும்.