3ஆம் உலகப் போர் உருவானால், அது தண்ணீருக்காகத்தான் உருவாகும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறிய நிலையில், அப்படி ஒரு போர் உருவானால் அதில் இந்தியா எந்த வகையிலும் பங்கேற்காது என்றும், ஏனெனில் இந்தியா தண்ணீர் தேவையில் முழுமையாக திருப்தி அடைந்திருக்கும் என்றும் மத்திய அமைச்சர் சி.ஆர். பட்டேல் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் தொடங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. நீர் பாதுகாப்பை முக்கியமாக கருதும் அரசின் நடவடிக்கைகள் பெரும் பயனை அளிக்கின்றன என்றும், வாஜ்பாய் கூறியது போல் மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவே இருந்தால், அந்த போரால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் தலைமையில், நீர் சேமிப்பிற்கான தேவைகள் அனைத்தும் முழுமையாக பூர்த்தியடையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றும், முதல் கட்டமாக நதிகளை தூய்மைப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார். கங்கை, யமுனை ஆகிய இரண்டு நதிகளையும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை அரசு வகுத்துள்ளது என்றும், இந்த இரண்டு நதிகளும் புனிதமாக இன்னும் சில மாதங்களில் மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
“உங்கள் குடும்பத்திற்காக நீங்கள் ஏழு தலைமுறைக்கு தேவையான செல்வத்தை சேகரித்து இருந்தாலும், அந்த தலைமுறைக்கு தேவையான நீரை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.”
அடுத்த தலைமுறைக்காக நீரை பாதுகாப்பது முக்கியம் என்பதால், “அமிர்த தளப்” என்ற திட்டத்தின் மூலம் அதிக குளங்களை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் நாடு முழுவதும் கொண்டு செல்ல அரசு திட்டமிட்டு வருவதாகவும், ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நாட்டில் உள்ள சிறிய வீடுகள் முதல் பெரிய பங்களாக்கள் வரை அனைத்திலும் மழைநீர் சேகரிப்பை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், எனவே இந்தியா நீர் மேலாண்மையில் முழுமையான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.