30 வயது ஒரு பெண் தனது காதலனுடன் இணைந்து, தனது 2½ வயது மகளை பலாத்காரம் செய்ய உதவியதாக கூறப்படும் சம்பவம் பெரும் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மும்பை போலீசார் கூறியதாவது, அந்த பெண் தனது மகளை “தன் முன்னிலையில்” குற்றவாளியை பலாத்காரம் செய்ய அனுமதித்துள்ளார். அதன்பின்னர் குழந்தை ஆபத்தான நிலையை அடைந்தபோது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த பெண், மருத்துவர்களை ஏமாற்றி, குழந்தை “எபிலெப்சி நோயால் பாதிக்கப்பட்டதாக” கூறியுள்ளார்.
அந்த பெண் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர். தற்போது அவர் மால்வானி பகுதியில் தன் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவர் 19 வயது கல்லூரி மாணவனுடன் தொடர்பு கொண்டு வந்தார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவில், மால்வானி ஜனகால்யான் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை கொண்டு வந்தபோது வெளிப்பட்டது.
பணியில் இருந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்தபோது, குழந்தை இறந்துள்ளதாக அறிவித்தார். பரிசோதனையின் போது, குழந்தையின் மர்ம உறுப்புகளில் காயங்கள் இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், மால்வானி போலீசாரின் அந்த பெண் மற்றும் அவருடைய காதலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பெற்ற தாயே தன்னுடைய இரண்டரை வயது பெண் குழந்தையை காதலன் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அந்த பெண் தாயா? அல்லது பேயா? என அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
