திரிணாமூல் காங்கிரஸ் தலைமையிலான மேற்கு வங்க அரசு, பெண்கள் பார்களில் வேலை செய்ய முடியாது என்ற 116 ஆண்டு பழைய தடையை நீக்கும் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே இனி விரைவில் பெண்களும் பார்களில் பணிபுரியலாம்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா விருந்தோம்பல் துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க வகையிலான சட்ட திருத்தம் என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான மேற்கு வங்க பட்ஜெட்டை நிதி அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் 1909ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “Bengal Excise Act” சட்டத்தை திருத்தி, ON-கேட்டகிரியில் (உடனடியாக மதுபானம் வழங்கும் இடங்கள்) பெண்கள் வேலை செய்யக்கூடாது என்ற விதியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
“பெண்கள் பார்களில் வேலை செய்ய முடியாது என்ற கட்டுப்பாடு இதுவரை இருந்தது. இப்போது அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது. நாம் அனைவரும் பாலின சமத்துவத்தை பற்றிப் பேசுகிறோம். அதையே கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என என்று சந்திரிமா பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
ஆங்கிலேயரின் காலத்திலிருந்த தொடர்ந்து வரும் இந்த தடை முதன்முதலில் 1909ஆம் ஆண்டில் “Bengal Excise Act” சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் கொல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மசோதாவில் மாநில அரசிற்கு கள்ளச்சாராயம் தயாரிப்பை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்படும் என்றும், .
ஜாகரி போன்ற மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை கண்காணிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கும் வகையிலும் திருத்தப்படுகிறது.
அதேபோல் 1944ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட “Bengal Agricultural Income-tax Act” திருத்தம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் சிறிய தேயிலை தோட்டங்களுக்கு வரிச்சலுகை வழங்கி, கோவிட் பேரழிவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க உதவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த மசோதாவால் அரசுக்கு நேரடி நிதிச் செலவு ஏற்படாது என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.