இன்று ஒரே நாளில் 11 லட்சம் கோடி லாபம்.. உச்சத்திற்கு சென்ற இந்திய பங்குச்சந்தை..

  இந்திய பங்குச் சந்தைகள் இன்று திடீரென உச்சத்திற்கு சென்ற நிலையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 11 லட்சம் கோடி லாபம் கிடைத்து, தொடர் நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது. இன்று சென்செக்ஸ் 1,570 புள்ளிகளுக்கு…

market

 

இந்திய பங்குச் சந்தைகள் இன்று திடீரென உச்சத்திற்கு சென்ற நிலையில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 11 லட்சம் கோடி லாபம் கிடைத்து, தொடர் நஷ்டத்தில் இருந்து மீண்டு வந்துள்ளது.

இன்று சென்செக்ஸ் 1,570 புள்ளிகளுக்கு மேல் ஏறியது, அதேபோல் நிப்டி 22,300 ஐ கடந்தது, இது சமீபத்திய மாதங்களில் மிக மோசமான டிரெண்டில் இருந்து திசை மாறியுள்ளது. .

இன்றைய பங்குச்சந்தை உச்சத்திற்கு மிகப்பெரிய காரணமாக அமெரிக்க வர்த்தக கொள்கையின் புதிய அறிவிப்பு தான். அமெரிக்கா, சீனாவை தவிர, பெரும்பாலான நாடுகளுக்கு 90 நாட்கள் தள்ளிவைக்கும் அல்லது இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை முன்னர் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையினால் முதலீட்டாளர்களின் பதட்டம் குறைந்தது, மேலும் இந்தியாவின் உலகளாவிய சப்ளை தொடர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கெப் குறியீடுகளும் வெகுவாக உயர்ந்தது. அமெரிக்க டாலரின் பலவீனமும் பத்திரப் பத்திரங்கள் நிலைத்திருப்பதும், ஆசிய சந்தைகள் வலுவாக இன்னொரு காரணமாக மாறியது.

அதுமட்டுமின்றி நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களை விதிவிலக்கு அளிப்பதாக அறிவித்தது. இந்த ஒரே ஒரு அறிவிப்பு தான் இந்திய பங்குச்சந்தை இன்றைய உச்சம் பெற இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேவையில்லாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளை டென்ஷன் ஆக்கிய நிலையில் அவருடைய இன்னொரு அறிவிப்பு உலகம் முழுவதும் பங்குச்சந்தை மீண்டும் வரவும் ஒரு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.