மேலும், கையால் எழுதுவதன் மூலம் படைப்பாற்றல், நினைவாற்றல் அதிகரிக்க முடியும் என்றும், தகவல் பதிப்பு திறனை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த முயற்சியால் அரசின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
நிதியமைச்சர் ஓ.பி. சவுத்ரி தனது பட்ஜெட்டில் நான்கு முக்கிய கருப்பொருள்களை மையமாக கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய நான்கு தரப்பு வளர்ச்சியை கணக்கில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நல்ல ஆட்சி, உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் தனது அரசு கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு சில நொடிகளில் ரிசல்ட் சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், 100 பக்கம் பட்ஜெட்டை கையால் எழுதிய நிதியமைச்சரை பற்றி நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகின்றன.