இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் தற்போது 100க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகள் உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கிராமத்தில் நீட் எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த கிராமம் குறித்து தற்போது பார்ப்போம்,.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்த பழங்குடி ஆதிக்கம் கொண்ட படியல் என்ற கிராமம் “அதிகாரிகளின் கிராமம்” என செல்லமாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு குழந்தையும் ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரி, பொறியாளர் அல்லது மருத்துவர் ஆகவேண்டும் என கனவு காண்கிறார்கள். மல்வா பகுதியின் இந்த பழங்குடி கிராமத்தின் மக்கள் தொகை வெறும் 5000 என்ற நிலையில் அதில் 100-ஐ அதிகமானோர் IAS அதிகாரிகளாக உள்ளனர். மேலும் அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.
இந்த கிராம மக்களில் சுமார் 90 சதவீதம் பீல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தார், ஜபுவா மற்றும் வெஸ்ட் நிமார் மாவட்டங்கள், மகாராஷ்டிராவின் துலே மற்றும் ஜல்கான் மாவட்டங்கள் மற்றும் ராஜஸ்தானிலும் காணப்படுகின்றனர்.
மத்தியப் பிரதேச அரசு தெரிவித்த தகவலின்படி, படியல் கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 90 சதவீதத்தை கடந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த கிராமத்தில் 70 நிர்வாக அதிகாரிகள் இருந்ததாகவும், 2024ல் இந்த எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதில் நீதிபதிகள், IPS அதிகாரிகள், IAS அதிகாரிகள், IES அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்குவர்.
மேலும் இந்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் நீட், மற்றும் JEE தேர்விலும் முழுமையாக வெற்றி பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு ஆச்சரியமான தகவல் ஆகும்.
மாநில அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த கிராமத்தில் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு அரசு ஊழியர் இருக்கிறார். மொத்த எண்ணிக்கை சுமார் 300 ஆகும். சுதந்திரம் வந்த காலத்தில் இருந்தே இங்குள்ள இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆரம்பித்துள்ளனர் என கூறப்படுகிறது.