இதுதான் உண்மையான Cashback.. புதியதாக வாங்கிய டிராம் பேன்ட்டில் இருந்த பணம்..!

  மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் டிராக் பேன்ட் ஆர்டர் செய்த நிலையில், அதில் பத்து ரூபாயும் ஒரு  பஸ் டிக்கெட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த ட்ராக் பேன்ட் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தது…

track phant

 

மும்பையை சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் டிராக் பேன்ட் ஆர்டர் செய்த நிலையில், அதில் பத்து ரூபாயும் ஒரு  பஸ் டிக்கெட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த ட்ராக் பேன்ட் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அதே நேரத்தில், “இதுதான் உண்மையான கேஷ் பேக்” என கிண்டலுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், முன்னணி நிறுவனம் ஒன்றின் இணையதளத்தில் டிராக் பேன்ட் ஆர்டர் செய்த இளைஞருக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.

அவர் அந்த டிராக் பேன்ட்டை மிகவும் ஆவலுடன் திறந்து பார்த்தபோது, அதில் உள்ள பாக்கெட்டில் பத்து ரூபாயும் ஒரு சிறிய துண்டு காகிதமும் இருந்ததாகவும், அது பஸ் டிக்கெட் போல் தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “இதுதான் உண்மையான கேஷ்பேக் டிஸ்கவுன்ட்! ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பத்து ரூபாய் எனக்கு லாபம் கிடைத்தது!” என்றும் கிண்டலுடன் எழுதியுள்ளார்.

இதற்கு நெட்டிசன்களும் கிண்டலான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். “பத்து ரூபாய்க்கு சர்ப் எக்ஸெல்  வாங்கி அதை கழுவி விடுங்கள்” என்று ஒருவர் தெரிவித்துள்ளார். “அந்த பத்து ரூபாயை வைத்துக் கொண்டு வாங்கிய டிராக் பான்ட்டை திருப்பி கொடுத்துவிடுங்கள்” என்றும் சிலர் யோசனை கூறியுள்ளனர்.

“புதிய டிராக் பேண்ட் ஆர்டர் செய்த நிலையில் அதற்கு பதிலாக, ஏற்கனவே யாரோ பயன்படுத்திய டிராக் பேன்ட்டை அனுப்பியுள்ளனர். பத்து நிமிடத்தில் டெலிவரி சர்வீஸ் என்பது முக்கியமல்ல, தரும் பொருளை தரமாக தர வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அந்த குறிப்பிட்ட நிறுவனம் என்ன பதில் சொல்ல போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.