தெலுங்கானாவில் 50 ஆண்டுகளாக வற்றாத அரசமர கிணறு.. கிணற்றில் இருக்கும் இன்னொரு ஆச்சர்யம்

Published:

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் உள்ள ஒரு கிணறு 50 வருடங்களை கடந்து இன்று வரை வற்றவே இல்லை… அந்த ஆச்சர்யமான கிணற்றில் உள்ள அதிசயமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

இன்றைக்கு வீட்டுக்கு வீடு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் முன்பு வீட்டின் கொள்ளை புறங்களில் இருக்கும் கிணறுதான் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் ராமகுண்டத்தில் இருக்கும் கிணறு ஒன்று அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 30 கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்தது.

மிகவும் சுவையான அந்த குடிநீர் கிணற்று நீரை பலரும் குடிக்க பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனா இன்று அந்த தண்ணீரை யாரும் பயன்படுத்துவதுஇல்லை. எனினும் இன்றும் ராமகுண்டம் மக்கள் அந்த கிணறை பொக்கிசம் போல் பாதுகாத்து வருகிறார்கள். அந்த கிணற்று நீர் 50 ஆண்டுகள் ஆன பின்னரும் சுவை மாறவே இல்லை.. தண்ணீரும் வற்றிப்போகவே இல்லை

தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம் பிபவர் ஹவுஸ் சௌராஸ்தாவில் ஓ சாய் என்ற ஹோட்டல் செயல்படுகிறது. அங்குள்ள மிகப்பெரிய நண்ணீர் கிணறு தான் ராமகுண்டத்தை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு பயன்படுத்தி வந்ததுள்ளார்கள். பல ஆயிரம் மக்களுக்கு குடிநீர் வழங்கிய இந்த ஊற்று கிணறு, இன்றும் பல வழிப்போக்கர்களின் தாகத்தை தீர்த்து வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் இந்த ஊற்று கிணற்றில் தண்ணீர் எடுத்து குடிக்க பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் ஒருமுறை கூட கிணறு வற்றியதே இல்லை. சில சமயம் மட்டும் சேறு அதிகமாக வரும்.

இந்த ஊற்று கிணற்றை ஹனுமய்யா என்பவர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்து கிணற்றின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் அளித்து வந்துள்ளார். அந்த கிணற்றில் பெரிய அரச மரம் ஒன்றிருந்தது. அந்த அரச மர கிணற்றை ராவி செட்டு உட பாவி என்று அழைத்துள்ளாரகள். இன்று பயன்படுத்தவில்லை என்கிற போதிலும், அந்த கிணற்றின் உரிமையாளரான சாய் ஹோட்டலின் மேலாளர் அப்சல் அவ்வப்போது போது சுத்தம் செய்து பராமரித்து வருகிறார்.

தெலுங்கானாவின் பல பகுதிகளில் இன்றும் கோடைக்காலம் வந்துவிட்டாலே பல கிராமங்களில் உள்ள ஊற்றுக் கிணறுகள் நீரின்றி முற்றிலும் வற்றி போய்விடுகிறது. ஆனால் ராமகுண்டம் அரச மரக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிரம்பியே இருக்குமாம். இந்த தண்ணீரின் சுவை 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்ததோ அப்படியே இன்று வரை இருக்கிறது. பில்டர் தண்ணீர் போல் சுவையாக இருக்கிறது. இந்த கிணற்று தண்ணீரை வாகன ஓட்டிகள் பலர் குடித்து செல்கிறார்கள்.

மேலும் உங்களுக்காக...