கையில காசே கிடையாது.. பசி வேற!திடீரென கவுண்டமணி செஞ்ச செயல்.. ஆடிப் போன நடிகர்

பல காமெடி நடிகர்களின் வாழ்க்கையை திருப்பி பார்த்தால் அவர்களுக்குள் ஏகப்பட்ட வலிகளும் போராட்டங்களும் நிறைந்திருக்கும். அவற்றையெல்லாம் கடந்து தான் நம்மை சிரிக்க வைத்து அவர்களும் பொழப்பை ஒட்டி இருப்பது நமக்கு தெரியும்.

அவர்களின் அழுகைக்கு பின்னாடி தான் நம்முடைய சிரிப்பு. இதுதான் பல காமெடி நடிகர்களின் நிலைமையாகவே இருக்கிறது. இது வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையில் காமெடி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் பொருந்தும். அந்த வகையில் கிட்டத்தட்ட 80 90களில் தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி ஆண்டவர் நடிகர் கவுண்டமணி.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து பல படங்களில் நடித்து மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர். இவருடன் சேர்ந்து செந்திலும் காமெடி டிராக்கில் பின்னி பிடல் எடுத்திருப்பார்கள். கிட்டத்தட்ட இவர்கள் கால்சீட்டுக்காக பல நடிகர்கள் காத்திருந்த காலம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.

ஏன் ரஜினி கூட கவுண்டமணி கால்சீட்டுக்காக காத்திருந்தது எல்லாம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் கவுண்டமணியின் ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் அப்போது ஒரு பத்திரிகை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு சமயம் கவுண்டமணியும் பீலி சிவமும் தெருவோரம் நடந்து கொண்டிருக்கையில் இருவருக்கும் சரியான பசியாம். அப்போது இவர்கள் இரண்டு பேரிடமும் சுத்தமாக காசு கிடையாதாம் .உடனே கவுண்டமணி திடீரென எங்கேயோ சென்று திரும்ப வரும்போது பரோட்டா பொட்டலத்துடன் வந்து நின்று இருக்கிறார்.

அப்போது பீலி சிவம் கவுண்டமணி இடம் இதை வாங்குவதற்கு காசு ஏது என கேட்க அதற்கு கவுண்டமணி அருகில் இருந்த ரத்த வங்கிக்கு சென்று அவருடைய இரத்தத்தை தானமாக விற்று அதில் வந்த காசை வைத்து தான் இந்த சாப்பாட்டை வாங்கினேன் என கூறினாராம். அதைக் கேட்டதும் பீலி சிவத்துக்கு கண்ணே கலங்கிடுச்சாம். இதை அந்த பத்திரிகை பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.