நாம மாறணும்னு நினைப்போம். ஆனா மாறவே மாட்டோம். ஏன்னா அது பிறவி குணம்னு ஈசியா சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்போம். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நாம விடாப்பிடியா தொடர்ந்து கடைபிடிப்பது கிடையாது.
அப்படி செய்யணும்னு நினைச்சா எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கு. எல்லாத்தையுமா கடைபிடிக்க முடியும்னு கேட்கலாம். முதல்ல நாலே நாலு விஷயங்களைக் கடைபிடிச்சாலே போதும். அப்புறம் எல்லாமே உங்களுக்கு கைவந்த கலையாகி விடும். என்னென்ன என்று பார்க்கலாமா..!
காலை எழுந்ததும் நாம் 4 முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதனால் நாம் காலை எழும் நேரம் மிக மிக முக்கியமானது. அந்த நாலு விஷயங்களை நாம் கடைபிடித்தால் போதும்.
காலை எழுந்த உடனே பலருடைய கண்களும் செல்போனைத் தான் தேடும். அது ரொம்ப ரொம்ப தவறான விஷயம். காலை எழுந்ததும் போனை பார்க்கக்கூடாது. இரவு முழுவதும் ஆழ்ந்த அமைதியில் நமது மூளை பயணம் செய்திருக்கும். அதனால் காலை எழுந்ததும் நல்ல செய்தியாக நாம் படிக்க வேண்டும்.
நமது மூளை எடுத்த ஓய்வை நமது உடல் முழுவதற்கும் தர வேண்டும். அதற்கு தான் நம் முன்னோர்கள் காலை எழுந்ததும் நாம் தியானம் செய்ய வேண்டும். அதே போல் காலை எழுந்ததும் நமது படுக்கையை ஒதுங்க வைக்க வேண்டும். இதை எவர் ஒருவர் சரியாக செய்கிறாரோ அங்கிருந்து அவருக்கு ஒழுக்கம் வர ஆரம்பிக்கிறது.
எந்தக்காரியத்தையும் தள்ளிப்போடாமல் அவரவர் வேலைகளைச் சோம்பல் இன்றி சுறுசுறுப்பாக செய்ய வைக்கிறது.
அதேபோல் காலை எழுந்ததும் பெட் காபி குடிக்காமல் பல் துலக்கிய பின்னரே குடிக்க வேண்டும் என்று உறுதியாகத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பச்சைத் தண்ணீரில் குளித்தால் உடல் நல்ல சுறுசுறுப்பாக இயங்கும்.
இது உடல் நலத்தையும், சூழலையும், காலநிலையையும் பொருத்தது. எப்போதுமே அதிக உஷ்ணமான நீரில் நாம் குளிக்கக்கூடாது. அது நரம்புகளில் நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.