நாம் உண்ணும் அரிசி வகைகளில் பெரும்பாலானோர் அறிந்தது பொன்னி, கல்சர் போன்ற வகைகளை தான். ஆனால் உண்மையிலேயே பலவகையான அரிசிகள் நம் பாரம்பரிய உணவுகளில் இருந்து வந்துள்ளன. அப்படி பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு அரிசி வகை தான் கருப்பு கவுனி அரிசி. இந்த கவுனி அரிசி ஆனது பலவகை சத்துக்கள் நிறைந்த அரிசியாக உள்ளது. இந்த கவுனி அரிசியை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுகிறார்கள்.
கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்:
1. புரதம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் கவுனி அரிசியில் 9 கிராம் புரதச்சத்தும் 3.5 கிராம் இரும்புச்சத்தும் உள்ளது. புரதச்சத்து உடல் இயக்கத்திற்கும் சேதமடைந்த செல்களை சரி செய்வதற்கும் பயன்படுகிறது. இரும்புச்சத்து ரத்தத்தின் வழியாக அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜனை கடத்திட உதவி புரிகிறது.
2. கருப்பு கவுனி அரிசியானது மற்ற அரிசி வகைகளை விட ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் நிறைந்தது. அல்சைமர் நோய் மற்றும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய காரணிகளை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றல் உடையது.
3. கருப்பு கவுனி அரிசியில் 18 அமினோ அமிலங்கள் உள்ளன. நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்த கருப்பு கவுனி அரிசி உதவும்.
4. கவுனி அரிசி கொலஸ்ட்ரால் மற்றும் குளுக்கோஸ் அளவினை சரியான அளவில் வைத்திருக்க உதவி புரிகிறது. இவை சரியான அளவில் இருப்பதால் இதய பாதிப்புகள் வராமல் காத்திட துணை புரிகிறது. மேலும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாத வண்ணம் தடுத்திடுகிறது. கருப்பு கவுனி அரிசியை உணவில் தொடர்ந்து எடுத்து வருபவர்களுக்கு பக்கவாதம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதில்லை.
5. கருப்பு கவுனி அரிசி கண் பார்வை திறனுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஈ பார்வைத் திறனை அதிகரிக்க செய்கிறது.
6. வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. நாள்பட்ட வீக்க சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரக்கூடியது.
7. புற்றுநோய் சிகிச்சையில் அதிக அளவில் துணை புரிகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள மூலக்கூறுகளுக்கு புற்றுநோய் செல்கள் மற்ற உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க கூடிய ஆற்றல் உண்டு.
8. கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுத்து கல்லீரலை காத்திட உதவுகிறது.
9. கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து நிறைந்தது. செரிமான சக்தியை அதிகரித்திட உதவி புரிகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
10. அதிகளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நிறைந்ததால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி உடலை டீடாக்ஸிஃபை செய்ய உதவுகிறது.
11. மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது. ஞாபகத் திறனை அதிகரித்து கற்றலை சிறப்பாக்கக் கூடியது.
12. சர்க்கரை நோயாளிகளுக்கு கருப்பு கவுனி அரிசி ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது. சர்க்கரை நோயினை சரி செய்திடக்கூடிய திறன் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உண்டு.
13. உடல் எடையை குறைப்பதில் கவுனி அரிசி மிகச்சிறந்த பங்காற்றுகிறது. நீண்ட நேரத்திற்கு வயிற்றை நிறைவுடன் வைத்திருக்க உதவும். கொலஸ்ட்ராலும் சரியான விகிதத்தில் உள்ளது.
14. முடி வளர்வதை அதிகரித்திட செய்யும். கிளை வெடித்தலை தடுத்து முடி அடர்த்தியாக வளர உதவி புரிகிறது.
15. சரும பராமரிப்பிலும் கவுனி அரிசி முக்கிய பங்காற்றுகிறது. சருமம் முதுமை அடைவதை தடுத்திட கருப்பு கவுனி அரிசி உதவுகிறது. பல சரும பிரச்சனைகளை சரி செய்வதாக கூறப்படுகிறது.