நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு சொல்வாங்க. இது ஒரு அற்புதமான பழமொழி. வெறுமனே படிச்சிட்டு கடந்து போய்விட முடியாது. இதன் வழி நிற்க நாம் என்ன செய்வது என்று பார்க்கலாம். உடல் உள் உறுப்புகளை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் முக்கியமானது நுரையீரல்.
நம் சுவாச சம்பந்தமான நோய்களுக்கு எல்லாம் மூலகாரணம் இதுதான். இந்த உறுப்பு பாதிக்கப்பட்டால் மூச்சுத்திணறல் வந்துவிடும்.
ஆஸ்துமா எல்லாம் இங்கிருந்து வருவதுதான். அப்படின்னா இந்த உறுப்பு எவ்ளோ முக்கியம்? அதைக் காப்பதற்கு ஒரு கஷாயம் செய்யலாமா… வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
சாப்பிட்டவுடன் தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தை நமது முன்னோர்கள் வைத்து இருந்தார்கள். வெற்றிலை இது நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை வழங்க கூடிய மூலிகை.
நம் நுரையீரலுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகளை முதல் சளி பிரச்சினை வரை தீர்க்கும் குணம் வெற்றிலைக்கு உண்டு. நமது நுரையீரலை பாதுகாக்க வெற்றிலை கஷாயம் அருந்த வீட்டில் வாரம் ஒரு முறை காச்சி குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 10
மிளகு – 2 டீ ஸ்பூன்
சீரகம் – 2 டீ ஸ்பூன்
கிராம்பு – 1 டீ ஸ்பூன்
சுக்கு சுண்டுவிரல் அளவு – 1 துண்டு
தண்ணீர் – 1 லிட்டர்
தயாரிக்கும் முறை: முதலில் வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து கல் குழவியில் வைத்து இடித்து தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கசாயமாக குடிக்கவும். சுலபமாக உங்கள் நுரையீரலை பாதுகாப்பதோடு உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசாயம் இது. கூடுதலாக வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானக் கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது