கரும்பினை பொதுவாக நாம் பொங்கல் காலங்களைத் தவிர்த்து மற்ற காலங்களில் சாப்பிடுவது கிடையாது, அதாவது மற்ற காலங்களில் கரும்பாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஜூஸாகவாவது எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
இத்தகைய மகத்துவம் வாய்ந்த கரும்பின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம். கரும்பு மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது. இதனால் மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அவர்களின் பத்தியத்தில் கட்டாயம் கரும்புச் சாறினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் இது கல்லீரல் செயல்பாட்டினை சீராக்கும் தன்மை கொண்டுள்ளது மேலும் சிறுநீரகக் கோளாறுகளை சரிசெய்வதாகவும் உள்ளது.
செரிமான மண்டலத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் கரும்பினை எடுத்துக் கொண்டால் சிறந்த தீர்வினைப் பெற முடியும். மேலும் பலர் தண்ணீர் குடிக்காமல் இருந்து சிறுநீரகக் கல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவர்.
ஆரம்ப நிலையில் சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் ஒருநாளைக்கு காலை, மதியம், மாலை, இரவு என 4 வேளை கரும்புச் சாற்றை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் சளிப் பிரச்சினை உள்ளவர்களும் கரும்புச் சாறினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். அம்மை போன்ற உடல் சூட்டு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு கரும்பிச் சாற்றினைப் பரிந்துரைத்தல் வேண்டும்.