மருந்தில்லா மருந்துன்னு ஒண்ணு இருக்காமே? அட இதுவல்லவோ அற்புதம்!

‘வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பர். அந்த வகையில் நோய் வந்த பின் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவம் பார்ப்பதைவிட நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கு நம் உடலைத் தயாராக வைத்து இருக்க…

meditation

‘வருமுன் காப்பவனே அறிவாளி’ என்பர். அந்த வகையில் நோய் வந்த பின் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவம் பார்ப்பதைவிட நோய் வருவதற்கு முன்பே அது வராமல் இருப்பதற்கு நம் உடலைத் தயாராக வைத்து இருக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.

எந்த ஒரு மருந்தும் சாப்பிடாமலேயே நம் உடலை நம்மால் கட்டுக்கோப்பாக வைக்க முடியும். அது எப்படி? மேஜிக்கான்னு கேட்குறீங்களா? உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்தான் அவை. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம்.

உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம். விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம். இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம். சிரிப்பு என்பதும் ஒரு மருந்து. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து. சூரிய ஒளியும் ஒரு மருந்து. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம்.

நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம். தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம். தியானம் என்பதும் ஒரு மருத்துவம். இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம். மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம்.

சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம். நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம். இந்த மருந்துகளை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்.