சுகர் பேஷன்டா… எப்பவுமே அதே கவலையா? இதைச் சாப்பிடுங்க… உங்களுக்கு விடுதலைதான்..!

சர்க்கரை நோய் இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் பயமுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்றாலே முதலில் சுகர் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு ஏற்பத்தான் மருந்து கொடுக்கிறார்கள். இளம் வயதினரையும் தாக்குகிறது. சர்க்கரை நோயில்…

sugar kasayam

சர்க்கரை நோய் இன்று அனைத்துத் தரப்பு மக்களையும் பயமுறுத்தும் நோயாக மாறிவிட்டது. ஆஸ்பத்திரிக்குச் சென்றாலே முதலில் சுகர் இருக்கிறதா என்றுதான் கேட்கிறார்கள். அதற்கு ஏற்பத்தான் மருந்து கொடுக்கிறார்கள். இளம் வயதினரையும் தாக்குகிறது. சர்க்கரை நோயில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற என்ன செய்வது? சிலர் ஆயுளுக்கும் மாத்திரையை சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

அந்த அளவைக் கூடாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைக்க முடியாதுன்னும் சொல்றாங்க. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. அதே நேரம் மூலிகை மருத்துவத்தில் இதை நிரந்தரமாகக் குணப்படுத்தலாம் என்கின்றனர். சரி. விஷயத்துக்கு வருவோம். சர்க்கரை நோயில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெற ஒரு கஷாயம் உள்ளது. அதை எப்படி தயாரிப்பதுன்னு பார்க்கலாமா…

வாழைப்பூ உணவுக்கு மட்டும் இன்றி, ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.வாழைப்பூவின் முழு சத்துக்களையும் பெற சிறந்த வழி, அதைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிப்பது தான்.  இந்த கசாயத்தை அடிக்கடி குடித்து வந்தால் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் வாழைப்பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம் உடலில் இன்சுலின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி இந்த வாழைப்பூ கசாயத்தைக் குடித்து வந்தால் சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

தயாரிப்பது எப்படி?

முதலில் வாழைப்பூவை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்நீரில் சிறிது உப்பு சேர்த்து, வாழைப்பூவை நன்கு வேக வைக்க வேண்டும். வாழைப்பூ வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து வடிகட்டி, அந்நீரில் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், வாழைப்பூ கசாயம் தயார்.