வறட்டு இருமல், அதிக சளித்தொல்லையில் இருந்து விடுபட… இதோ அருமருந்து..!

சுவாசப்பாதையில் கோளாறு, நுரையீரல் தொற்று காரணமாக சளி அதிகமாகும். இதனால் அடிக்கடி இருமல், தும்மல் என நமக்குப் பலவித இன்னல்கள் வருவதுண்டு. அதுவும் கோடைகாலத்தில் திடீர் என மழை பெய்வதால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படும்.…

remove from cold

சுவாசப்பாதையில் கோளாறு, நுரையீரல் தொற்று காரணமாக சளி அதிகமாகும். இதனால் அடிக்கடி இருமல், தும்மல் என நமக்குப் பலவித இன்னல்கள் வருவதுண்டு. அதுவும் கோடைகாலத்தில் திடீர் என மழை பெய்வதால் உடல்நிலை அதிகம் பாதிக்கப்படும்.

இதுபோன்ற நேரங்களில் தான் உடல் சூடு அதிகமாகி சளி, கொப்புளங்கள், வேனல் கட்டி என எல்லாம் வரும். அந்த வகையில் நம்மை அதிகமாகத் தொந்தரவு கொடுப்பது சளி தொல்லைதான். இதற்கு அடிக்கடி மாத்திரை சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இயற்கை முறையில் இனிய மருத்துவம் இருக்கு. வாங்க பார்க்கலாம்.

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் 5-6 துளசி இலைகளை மென்று சாப்பிட்டால், சளி, இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். துளசி டீ உடலுக்கு நன்மை அளிக்கும். சளியை குறைக்க சிறந்த வழி அதைக் கண்டறிந்து அதை சுவாசப் பாதையில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும்.
சளியை குறைக்க நீராவி பிடித்தல், வெதுவெதுப்பான நீரைப் பருகுதல் போன்ற விஷயங்களை செய்து வரலாம். இதனால் நுரையீரலில் இருந்து அதிகப்படியான சளியை வெளியேற்ற முடியும்.

1 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த சிரப்பை பருகி வர தொண்டைப் புண் மற்றும் வறட்டு இருமலை போக்க முடியும். ஒரு நாளைக்கு 3 முறை என தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். தொண்டை வலியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இஞ்சி உதவுகிறது. தேன் சளியை வெளியேற்றவும் இருமலை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. நீரேற்றமாக இருப்பது சுவாச பாதையில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது.

எனவே நிறைய தண்ணீர் எடுத்து வாருங்கள். இது தொண்டையில் உள்ள சளியை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. எனவே சளித் தொல்லை இருக்கும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. உப்பு நீரை வைத்து வாய் கொப்பளிப்பது உங்கள் தொண்டையை சுத்தம் செய்து சளியை குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

நீரை குலுக்கி கொஞ்சம் உப்பு நீரை வாயில் ஊற்றி தொண்டையில் படும் படி செய்து வாயை கொப்பளிக்க வேண்டும். இது மேல் சுவாசப் பாதையில் தொற்று ஏற்படுவதை தடுக்கிறது. அதிகப்படியான சளியை போக்க ஏலக்காய், வெங்காயம், அன்னாசி, இஞ்சி, பூண்டு, மிளகுத்தூள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். காரமான உணவுகள் கெட்டியான சளியை வெளியேற்ற உதவுகிறது.