இது கம்ப்யூட்டர் காலம். எதுக்குமே எனக்கு நேரமில்லைன்னு ஓடுவாங்க. காலைல எழுந்ததும் குளித்தும் குளிக்காமலும், சாப்பிட்டும் சாப்பிடாமலும் அவசர கதியில் ஆபீஸ் ஓடுறவங்களாகத் தான் இருக்காங்க. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எல்லாமே நெகடிவ் திங்கிங்காகத்தான் வந்து பயமுறுத்துகிறது. அப்படின்னா பாசிடிவ் அதாவது நேர்மறையான எண்ணமும் ஆற்றலும் அதிகரிக்க என்ன செய்வது? வாங்க பார்க்கலாம். காலைல எழுந்ததும் தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு இதை மட்டும் சொல்லுங்க. அப்புறம் நாளடைவில் உங்களோட எனர்ஜி அதிகரிப்பதை நீங்களே உணரலாம்.
தினமும் தொடர்ச்சியாக 9 நாட்கள் சொல்லி பாருங்கள். உங்களுக்கு பிடித்த கட்டளைகள் மட்டும் சொல்லி வந்தாலே போதும். அனைத்தையும் சொல்ல விரும்பினாலும் சொல்லலாம். எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை
என் நோய் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது
நான் நிகழ்காலத்தில் வாழ்கிறேன். வாழ்வில் எனக்கு கிடைத்த விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன். என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது. நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். நான் பணத்தை ஒரு காந்தம் போல வசீகரிக்கிறேன். நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.
எனது எண்ணங்களில் சுதந்திரத்தை உணர்கிறேன். என்னை நான் நேசிக்கிறேன். எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது. எனக்குள் ஆனந்தமும், நிம்மதியும் உணர்கிறேன். நான் சாதிக்கப் பிறந்தவன். என் மனம் தெளிவாக இருக்கிறது. என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன். அன்பை பெறவும், தரவும் நான் தயாராக இருக்கிறேன். எனது வாழ்வை சிறப்பாக்க இந்த பிரபஞ்சமே செயல்படுகிறது. என் உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.
என் மனம் அமைதியாக இருப்பதால் லட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது. தெய்வீக சக்தி எப்பொழுதும் என்னை சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கிறது. என் ஆராவில் உள்ள நல்ல சக்தி அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது. இந்த நொடி என்னுடையது, அதை நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்.
என் உடல் கச்சிதமாகவும் மனம் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன. என் ஆழ்மனதின் சக்தியால் வாழ்வில் அற்புதங்களை உருவாக்குகிறேன். என் லட்சியங்கள் நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்.