நகங்கள் காட்டும் உடல் நோய்கள்… அடேங்கப்பா இவ்ளோ இருக்கா?

உங்கள் நகங்களே உங்கள் உடல் நலத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதாவது எச்சரிக்கை விடுக்கின்றன. இதைத் தெரிந்து கொண்டு நாம் உடல் நலத்தைப் பேணி வர வேண்டும். உடல் நலத்தை என்னென்ன அறிகுறிகள் மூலம் நமது…

உங்கள் நகங்களே உங்கள் உடல் நலத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதாவது எச்சரிக்கை விடுக்கின்றன. இதைத் தெரிந்து கொண்டு நாம் உடல் நலத்தைப் பேணி வர வேண்டும். உடல் நலத்தை என்னென்ன அறிகுறிகள் மூலம் நமது நகங்கள் காட்டுகின்றன என்று தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் துத்தநாகக் குறைபாடு இருக்கும் என்று பொருள். நகங்களில் மஞ்சள் நிறமாக தெரிந்தால் பூஞ்சைத் தொற்று உள்ளது என்று அர்த்தம். நகங்களில் ஸ்பூன் வடிவம் தெரிந்தால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என்றும், ரத்த சோகை என்றும் பொருள். செங்குத்துக் கோடுகள் தெரிந்தால் வைட்டமின் பி12 குறைபாடு உள்ளது என்று பொருள்.

nails
nails

நகங்களில் கிடைமட்ட கோடுகள் தெரிந்தால் நோய், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நகம் நீலம் அல்லது ஊதா நிறத்தில் இருந்தால் இதயம், நுரையீரல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். நகத்தில் கருப்புக் கோடு தெரிந்தால் மெலனோமா நோய்க்கு எச்சரிக்கை விடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கிளப் நகங்கள் இருந்தால் நுரையீரல் அல்லது இதயநோய்க்கான அறிகுறி என்று பொருள். நோய் வந்தபின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்போம். அதுவே முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்த தலையாய பாடம்.