தினமும் நமக்கு உடல்நிலை சார்ந்த கவனிப்பு இருக்க வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அதுவும் 40 வயதைக் கடந்தவர்கள் அவசியம் நம் உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். 40ல இருந்து 45 வயசானா அவங்களை அங்கிள், மாம்ஸ்னு இப்ப உள்ள யூத்கள் கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க. அதே நேரம் அந்த அங்கிளுக்கும் கொஞ்சம் முதுமை பயம் வந்துவிடும். அதனால அதைப் போக்க என்ன செய்யலாம்னு பார்க்கலாமா…
நீங்க எவ்ளோதான் பிசியா இருந்தாலும் ஆரோக்கியம் அவசியம். அதையும் அடிக்கடி உறுதிப்படுத்திக்கணும். டீ குடிப்பவர்கள் பால் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கடுங்காப்பி, கடுன்டீ பெஸ்ட். அதே போல எலுமிச்சைச்சாறு கலந்த லெமன் டீ சாப்பிடுவது உகந்தது. பகல்ல அதிகமா தண்ணீர் குடிங்க. இரவுல குறைவாக தண்ணீர் குடிங்க. அதே மாதிரி பகல்ல 2 கப் காபி மட்டும் குடிங்க. அல்லது முழுவதுமாக நிறுத்துவது சாலச்சிறந்தது.
ஆயில் ஐட்டத்துக்கு விடை கொடுங்க. வாய்க்கு ருசியா இருக்குன்னு எண்ணைப் பலகாரங்களை வடை, பஜ்ஜி, போன்டான்னு சாப்பிடாதீங்க. அதுதான் பல நோய்களுக்கும் காரணம். மாலை 5 மணி அல்லது 6 மணிக்குப் பிறகு கொஞ்சமாக சுண்டல் மாதிரி ஏதாவது சாப்பிடுங்க. குளிர்ந்த நீரில் மாத்திரைகளைப் போடாதீங்க. நைட் தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி மருந்துகளை சாப்பிடுங்க. சாப்பிட்டதும் படுத்துடாதீங்க. எப்பவுமே கூலான வாட்டரைக் குடிக்காதீங்க. வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிங்க.
தினமும் குறைந்தது 8 மணி நேரம் தூங்குங்க. முடிந்தால் மதியம் முதல் மாலை 3 மணிக்குள் அரை மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போடுங்க. இது மன அழுத்தத்தைக் குறைக்கும். இளமையாகவும் எளிதில் வயதாகாமலும் இருக்க உதவும். மொபைல்ல குறைந்த பேட்டரி சார்ஜ் இருந்தா கால் பண்ணாதீங்க. கதிர்வீச்சு கடுமையாகத் தாக்கும். மொபைல் பேச இடது காதை மட்டும் பயன்படுத்துங்க. வலது காது மூளையைப் பொய்த் தாக்கும். இயர்போன் பயன்படுத்துவது பெஸ்ட். புளூடூத் ஹெட்செட்டை யூஸ் பண்ணாதீங்க.
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி செக் பண்ணுங்க. தேவைன்னா யூரின் டெஸ்ட்டும் பாருங்க. சாப்பாட்டுல உப்பு, சர்க்கரையைக் குறைக்குறது ரொம்ப நல்லது. அதே போல மட்டன், சில்லி சிக்கன், பாலில் தயாரான பொருள்கள், மாவுச்சத்துள்ள இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது ரொம்பவே நல்லது. கீரை, காய்கறிகள், பீன்ஸ், பழங்கள், கொட்டைகளை அதிகம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருங்க. அவ்ளோதான்.