பொதுவாக உளுந்தானது எலும்பினை வலுப்படுத்துவதாகவும், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் உள்ளது, உளுந்து வகையில் நாம் பொதுவாக வெள்ளைநிற உளுந்தினையே பயன்படுத்துவோம்.
ஆனால் உளுந்தில் கருப்பு நிற உளுந்தானது நாம் அதிக அளவில் பயன்படுத்தாத உணவுப் பொருளாக இருந்தாலும், இது பலரும் அறியாத வகையில் குறிப்பிடத்தக்க சில பயன்களைக் கொண்டுள்ளது, அவை குறித்து இப்போது நாம் பார்க்கலாம்.
கருப்பு உளுந்தானது எலும்பினை வலுப்படுத்துவதாக உள்ளது, மேலும் இது உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சாப்பிட்டால் உடல் சூடானது நிச்சயம் குறையும்.
மாதவிடாய்ப் பிரச்சினை உள்ளவர்களும், மாதவிடாய் நின்றவர்களும் கட்டாயம் கருப்பு உளுந்தினை எடுத்துக் கொள்வது உடலுக்கு கூடுதல் பலம் சேர்க்க உதவும், மேலும் நரம்பு சம்பந்தப்படட் பிரச்சினைகளான நரம்புத் தளர்ச்சி என்பது போன்ற பிரச்சினைகளுக்கு கருப்பு உளுந்து சிறந்த தீர்வாக இருக்கும்.
மேலும் வாதம், கபம், பித்தம் ரீதியான பிரச்சினைகள் உள்ளோர் கட்டாயம் கருப்பு உளுந்தினை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். எலும்பு முறிவு, தசை முறிவு போன்ற பிரச்சினைகளுக்கும் கருப்பு உளுந்து சிறப்பான பலனைத் தரும்.
மேலும் கரு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கருப்பு உளுந்தானது, கர்ப்பப்பை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.