மக்கள் பொதுவாக கவனிக்க வேண்டிய ஆனால் கவனிக்க தவரும் விஷயம் உடல் சூடு. நம் உடல் சூடாகி விட்டால் அது பல அசௌரியங்களையும் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உடல் சூடு பல உடல் உபாதைகளுக்கு நேரடி காரணமாகவும் இருக்கிறது. அதனால் உடல் சூட்டை குறைப்பது அவசியமான ஒன்றாகும்.
நம்மை சுற்றி இருக்கும் காலநிலை மாற்றங்கள், நுண்ணுயிரிகள், சாப்பிடும் மருந்துகள், முறையற்ற வாழ்க்கை முறை, மெனோபாஸ் போன்ற பல காரணங்களால் உடல் சூடு அதிகரிக்கும். உடல் சூடு அதிகரித்து விட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, கண் வலி, கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். முதலில் வெளிப்புறமாக உடல் சூட்டை எப்படி குறைப்பது என்பதை பார்க்கலாம்.
உடல் சூடு இருப்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி காற்றாட வெளியே செல்ல வேண்டும். வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்க கூடாது. உடல் சூடு இருப்பவர்கள் சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து விட்டு குளிர்ந்த நீரில் குளிக்கலாம். ஐஸ்கட்டி கொண்டு மணிக்கட்டு கழுத்து நெஞ்சு பகுதி போன்றவற்றில் ஒற்றி எடுக்கலாம். இவை உடலில் உள்ளே விரைவாக குளிர்ச்சியை ஏற்படுத்தும். சுத்தமான காட்டன் வகை லேசான ஆடைகளை அணிவது உடல் சூட்டை குறைக்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை குறைக்க மிக சிறந்த வழியாகும்.
இனி உணவுகளின் மூலம் உடலின் உள்ளே இருக்கும் சூட்டை எப்படி குறைப்பது உடலை குளிர்ச்சியூட்டும் உணவுகள், பழங்கள் என்னென்ன என்பதை இனி காண்போம்.
1. இளநீர்: கோடைகாலத்தில் மட்டுமல்லாது எல்லா காலத்திலும் கிடைக்கும் மிகச்சிறந்த பானம் இளநீர். இளநீருக்கு இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை உள்ளது.
2. மோர்: உடல் சூட்டை தணிக்கும் உணவுகளில் மோர் ஒரு ஆரோக்கியமான பானமாகும். இதில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தேவையான ப்ரோபயாட்டிக்குகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது ஆகும்.
3. கற்றாழை: உடல் சூட்டை தணிக்க சிலர் கற்றாழை ஜூஸை செய்து குடிப்பார். அதுவும் சூட்டை குறைக்கும்.
4. வெள்ளரி மற்றும் தர்பூசணி: இவ்விரண்டிலும் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதால் வெள்ளரி மற்றும் தர்பூசணி சாப்பிடும்போது உடனடியாக நம் உடம்பு குளிர்ச்சி அடையும்.
5. எலுமிச்சை ஜூஸ்: வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ஜூஸ் உடல் வெப்பநிலையை குறைத்து குளிர்ச்சியூட்ட மிகச்சிறந்த பானம் என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இது உடலை குளிர்ச்சி ஊட்டுவது மட்டுமல்லாமல் உடனடியாக புத்துணர்ச்சி தரும்.
6. வெங்காயம்: உடல் சூட்டை தணிக்கும் உணவுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது அது சிறந்த பலன்களை தரும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் சாலடுகள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம்.
7. நீராகாரம்: உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் தினமும் காலையில் முந்தைய நாள் வடித்த சோற்றில் நீரை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை அதை நன்கு பிசைந்து அந்த நீராகாரத்தோடு சேர்ந்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும்.
8. பதநீர்: பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் உடல் வெப்பநிலையை குறைக்கும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத பானம். எந்த செயற்கையும் கலக்காத இயற்கையான சிறந்த பானமாகும். இன்றளவும் கிராமப்புறங்களில் நீங்கள் சென்றால் பதநீர் எளிதாக கிடைக்கும். இந்த வகை உணவுகள் உடல் சூட்டை எளிதாக தணிக்கும்.