இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். நம் பழங்காலத்து உணவு முறைகளான சிறுதானிய உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல் உடல் பிட்டாக இருக்க வேண்டும் இளமையாக இருக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி நீங்கள் வயசே ஆகாமல் இளமையாக இருக்க வேண்டும் என்றால் இந்த பழங்களை உங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். அது என்னவென்று இனி காண்போம்.
நாம் என்றும் இளமையாக இருக்க ஆன்டிஆக்சிடென்ட் வைட்டமின் நீர்ச்சத்து நார்ச்சத்து நிறைந்த பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும். இதுதான் நம் சருமத்திற்கான கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்து என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. நீங்கள் என்றும் இளமையாக இருக்க ப்ளூபெர்ரி, அவகேடோ, மாதுளை பழம், பப்பாளி பழம், தர்பூசணி போன்றவை உதவுகிறது.
இந்த ப்ளூபெர்ரியில் சரும செல்களை புதுப்பிக்கும் பல வைட்டமின்கள் இருக்கிறது. இது கொலோஜன் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் சி யை வழங்குகிறது. அடுத்ததாக மாதுளை. இதில் பல சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உங்களது சருமத்தை இளமையாக இருக்கச் செய்யும்.
அடுத்து அவகடோவில் மோனோசச்சுரைட் கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. ஸ்கின் ரிப்பேர் மற்றும் ரெஜினரேஷனுக்கு இது அதிகம் உதவுகிறது. மேலும் ஆன்ட்டி ஏஜென்ட் தன்மைகள் இதில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்ததாக பப்பாளி. இதில் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கக்கூடிய வைட்டமின் ஏ சி ஆகியவை இருப்பதால் இது உங்களை இளமையாக இருக்க உதவும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக தர்பூசணி. தர்பூசணியில் 90 க்கும் அதிகமான தண்ணீர் சத்து இருப்பதால் சருமத்தை ஈரப்பதத்தோடு இருக்க செய்யும். அதனால் இந்த பழங்களை உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையாக இருக்கலாம்.