உடல் உஷ்ணத்தை ஈசியா குறைக்கலாம்…இதை மட்டும் செஞ்சாலே போதும்…!

By Sankar Velu

Published:

உடல் சூடு என்பது ரொம்ப பெரிய வியாதி. இதுதான் பல வியாதிகளுக்கும் மூல காரணமாக உள்ளது.

அதே நேரத்தில் உடல் சூடு மிகவும் முக்கியம். அதை வைத்து தான் உடல் இயக்கம் நடைபெறுகிறது. அது அதிகமாகும்போது நாம் அவதிநிலைக்குள்ளாகிறோம்.

காலநிலைக்கு ஏற்பட உடலில் சூடு ஏறுகிறது. குளிர்காலத்தில் தான் அதிக உஷ்ணம் வரும். பருவநிலைக்கேற்ப இந்த மாற்றம் நிகழும். புளி, காரம் ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.

மருந்துகளின் மூலமாகவும் உடல் சூட்டையும், குளிர்ச்சியையும் தரும். இப்ப எல்லாம் பலருக்கும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்தாலும் சூடு. அதிக நேரம் பயணம் செய்தாலும் உடல் சூட்டைத் தந்து விடும். பேசுவது, பாடுவது நிறைய லைட் எல்லாம் வைத்து வேலை செய்யும் நடிகர்களுக்கும் உஷ்ணம் வருவதுண்டு.

Eye irritate
Eye irritate

நல்ல தூக்கம் இருக்காது, கண் எரிச்சல், அடிக்கடி வயிற்று வலி, ஒற்றைத்தலைவலி, உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள், தலையில் பாரம், மூளை சரியாக வேலை செய்யாது, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், அதிக கோபம் இவை தான் உடல் உஷ்ணத்தின் விளைவுகள்.

இந்த சூட்டைப் போக்க நிறைய வழிகள் உள்ளன. நல்ல தலைக்கு குளிக்க வேண்டும். இது உடல் சூட்டை சமநிலைப்படுத்தும். தேங்காய் எண்ணை தினமும் தேய்க்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். இது உடல் சூட்டை தணிப்பதில் பெரும்பங்கு வகிக்கும்.

பகலில் வைக்காவிட்டால், இரவு தூங்கும்போது கண்டிப்பாக தலைக்கு எண்ணை வைக்க வேண்டும். உணவில் சீரகம் நிறைய எடுக்கலாம். காலையில் எழுந்ததும் சீரகத்தண்ணீர் குடிக்கலாம்.

பார்லியை லேசா வறுத்து அதுல கஞ்சி வச்சி அதையும் எடுத்துக்கலாம். தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு குடிக்கிறோமோ அவ்வளவு சூட்டைத் தணிக்கும். சிறுநீர் தான் உடல் சூட்டை வெளியேற்றும். அதனால் தான் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

Mathulai 1
Mathulai

அடுத்தது முக்கியமாக மாதுளம்பழம் சாப்பிட வேண்டும். இது உடல் சூட்டை நிறையக் குறைக்கும். அல்சரைக் கூட தடுக்கும். உடலுக்குள் உண்டாகும் புண்ணையும் ஆற்றும். பாலில் இருந்து எடுக்கக்கூடிய தயிர், மோர் நல்ல குளிர்ச்சி.

மோரில் பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டுக் குடிக்கலாம். வெண்ணையை கொஞ்சம் சாப்பிட்டாலே குளிர்ச்சி. நெய்யும் அப்படித்தான். இதெல்லாம் நல்ல கொழுப்பு. இதனால் வெயிட் போட மாட்டீங்க.

வாழைப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சம்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருபவை. இவை எல்லாம் வைட்டமின் சி உள்ளவை. புதினா டீ, கிர்ணி பழம் ஆகியவையும் உடல் சூட்டைத் தணிக்கின்றன.

mullanki
mullanki

காய்கறிகளில் வெள்ளரி, முள்ளங்கி, பூசணி, சவ் சவ், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகள் நமக்கு நல்ல பலன் தரும். இளநீர் மிக முக்கிய மருந்து. இதைப் போல சூட்டைத் தணிக்கிற பொருள் வேறு ஒன்றும் இல்லை.

தினம் ஒரு இளநீர் குடிக்கலாம். பருவகாலங்களுக்கு ஏற்ப நுங்கு, பதநீர் போன்றவையும் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். சோற்றுக்கற்றாழை ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். இதோட ஜெல்ல நாம் உடலில் போடலாம்.

 

 

 

Leave a Comment