உங்கள் கூந்தல் நல்லா ஆரோக்கியமா வளரணுமா? அப்போ இந்த எண்ணெயை உடனே தயாரிங்க!

By Sowmiya

Published:

ஆண் பெண் இரு பாலருக்குமே தங்களுடைய கூந்தல் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் பருவநிலை மாற்றம், அதிக அளவு வெயில், வேலை பளு, மன அழுத்தம்,  ஆரோக்கியம் இல்லாத உணவு, மாசு இப்படி பல்வேறு காரணங்களால் இள வயதிலேயே முடி உதிர்வு அதிகம் ஏற்படுகிறது. வறண்ட ஆரோக்கியம் இல்லாத பிளவு பட்ட கூந்தல் பலரையும் கவலைக்கு உள்ளாக்குகிறது.

woman

சந்தைகளில் விற்கும் மூலிகை எண்ணெய்கள், ஆயுர்வேத எண்ணெய்கள் என எத்தனை தான் முயற்சி செய்தாலும் பலன் பெரிதாய் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் ஒரு முறை இந்த எண்ணெயை வீட்டில் தயாரித்து முயற்சி செய்து பாருங்கள்…

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர்
  • செம்பருத்தி இலை – 20
  • துளசி – 25 கிராம்
  • கருவேப்பிலை – 50 கிராம்
  • மருதாணி – 25 கிராம்
  • நெல்லிக்காய் – 10

home made herbal hair oil

எண்ணெய் தயாரிக்கும் முறை 1:

மேற்கண்ட இலைகள் மற்றும் நெல்லிக்காயினை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.

இவைகளை ( நெல்லிக்காயை விதை நீக்கி சேர்த்துக் கொள்ளவும்) ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதினை சிறு சிறு தட்டைகளாக தட்டி எடுத்துக் கொள்ளவும்.

இந்த தட்டைகளை ஒரு தாம்பலத்தின் மீது வைத்து வெயிலில் ஒரு நாள் காய வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காயவைத்த தட்டைகளை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

எண்ணெய் நன்கு நிறம் மாறும் வரை கொதிக்க விடவும்.

எண்ணெய் நிறம் மாறி இலைகளின் வாசம் வந்ததும் அடுப்பினை நிறுத்தி எண்ணெயை ஆற வைக்கவும்.

ஆறிய பின் இவைகளை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணையை ஊற்றி வைக்கலாம்.

long hair

எண்ணெய் தயாரிக்கும் முறை 2:

தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேற்கண்ட மூலிகைகளை அப்படியே சேர்க்கலாம்.

நெல்லிக்காயினை மட்டும் விதை நீக்கி இடித்து விட்டு சேர்க்கலாம்.

மூலிகைகளின் நிறம் எண்ணெயில் சேர்ந்ததும்‌ அடுப்பை அணைத்து விடவும்.

எண்ணெய் ஆறிய பின் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் வைத்துக் கொள்ளலாம்.

herbal oil

இந்த எண்ணெயை வாரம் மூன்று முறை கூந்தலின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் உதிர்வு குறைந்து நல்ல ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலினை பெறலாம்.