வாய் துர்நாற்றமா? வீட்டிலேயே தயார் செய்யலாம் அதி அற்புத பல்பொடி…!

ஆலும், வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதின்னு நாம படித்ததோடு சரி. பல் துலக்கும்போது அதை எல்லாம் மறந்துட்டு கண்ட கண்ட பேஸ்டை வாங்கித் தேய்க்கிறோம். அதிலும் அது இருக்கா, இது இருக்கான்னு பார்த்துப்…

ஆலும், வேலும் பல்லுக்குறுதி. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதின்னு நாம படித்ததோடு சரி. பல் துலக்கும்போது அதை எல்லாம் மறந்துட்டு கண்ட கண்ட பேஸ்டை வாங்கித் தேய்க்கிறோம். அதிலும் அது இருக்கா, இது இருக்கான்னு பார்த்துப் பார்த்து வாங்குறோம்.

வாய் துர்நாற்றம், பற்களின் ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை, பல் ஈறு வலி ஆகியவை குணமாக நீங்க வீட்டிலேயே சிறந்த பற்பொடி தயாரிக்கலாம். இந்தப் பொருள்களில் வீட்டில் கிடைக்காதவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எப்படி தயாரிப்பது? என்னென்ன பொருள்கள்னு பார்க்கலாமா…

தேவையான பொருள்கள்:

1. நெற்பதர் சாம்பல் – 100 கிராம்
2. ஆலம்பட்டை பொடி – 20 கிராம்
3. வேப்பம்பட்டை பொடி – 20 கிராம்
4. லவங்கம் – 10 எண்ணிக்கை
5. ஏலக்காய் – 5
6. கடுக்காய் – 5
7. மாசிக்காய் – 5
8. கருவப்பட்டை – 2 துண்டு
9. மஞ்சள் – 2 ஸ்பூன்
11. தான்றிக்காய் – 5
12. புதினா (காய்ந்தது) – 1 கைப்பிடி அளவு
13. இந்துப்பு – 2 ஸ்பூன்
14. ஓமம்; – 1ஸ்பூன்
15. நெல்லி வத்தல் – 10
16. சீரகம் – 1 ஸ்பூன்
17. சுக்கு – 2துண்டு

எப்படி செய்வது?

இந்தப் பொருள்களை எல்லாம் நல்லா காய வைத்து மிக்சியில் போட்டி அரைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் பரபரவென இருந்தால் தப்பே இல்லை. சலிக்கணும் என்றாலும் சலிக்கலாம். பொடியை வாயில் வைத்ததும் உப்பு குறைவாக இருந்தால் சிறிது இந்துப்பை சேருங்க. இதைக் கொண்டு பல் விளக்கினால் பொருள்விளங்கா உருண்டையைக் கடித்தாலும் பல் உடையாது. குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.