தினமும் உடலுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வரும். அதுக்கு முறைப்படி உணவு வகைகளை நாம் சாப்பிடாததுதான் காரணம். உணவே மருந்துன்னு திருமூலர் அப்பவே சொல்லிருக்காரு. அந்த வகையில் நமது உடலுக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் நாம் சாப்பிடும் உணவு வகைகளே பூர்;த்தி செய்கிறது. ஆனால் நமக்கு என்னென்ன சாப்பிடணும்னு தான் தெரிவதில்லை.
வாய்க்கு எது எதெல்லாம் ருசியா இருக்கோ அதை எல்லாம் சாப்பிட்டு விடுகிறோம். அந்த வகையில் இஞ்சி, பூண்டு, வெங்காயம்னு பல அற்புதமான பொருள்கள் உணவு தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றில் gin என்னென்ன வேலைகளை எல்லாம் செய்கிறது? அதை எப்படி சாப்பிட்டால் என்ன பலன்கள்னு பார்க்கலாமா…
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்….