கெட்ட கொழுப்பு கரையணுமா? தொப்பை குறையணுமா… இதுதான் பெஸ்ட் வழி

சிலர் தங்கள் உடல் பருமனைக் குறைப்பதற்காக நாள் கணக்கில் பட்டினி கிடப்பார்கள். ஒருவேளை பட்டினி கிடப்பார்கள். சிலர் ஒரு வேளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இது எல்லாம் பலனைத் தருமா என்றால் இல்லை என்றே…

thoppai

சிலர் தங்கள் உடல் பருமனைக் குறைப்பதற்காக நாள் கணக்கில் பட்டினி கிடப்பார்கள். ஒருவேளை பட்டினி கிடப்பார்கள். சிலர் ஒரு வேளை தான் சாப்பிடுவார்கள். ஆனால் இது எல்லாம் பலனைத் தருமா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

மாறாக அல்சர் போன்ற வியாதிகளைக் கொண்டு வந்து விடும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். ஆனால் அதில் உணவுப்பழக்கங்களை சரிவர கடைபிடிக்க வேண்டும். இதுதான் நம் உடல் நலனுக்கு பேருதவி புரியும். வாங்க என்ன சாப்பிட்டு என்ன செய்து உடல் பருமனைக் குறைப்பது என்று பார்ப்போம்.

நாம் பொதுவாக தினமும் 3 வேளை சாப்பிடுகிறோம். இதுல பெருமளவு அரிசி சார்ந்த உணவாகவே இருக்கும். இதனால் நம் உடல் பருமன் எளிதில் வருகிறது. சாப்பிட்டால் தவறு இல்லை. அதற்கேற்ப உடல்ரீதியான உழைப்பு இருக்க வேண்டும். இப்போது பெரும்பாலானவர்கள் கணினி முன் அமர்ந்தே வேலை செய்கின்றனர். அதனால் அவர்களுக்கு அடிவயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பையை உண்டாக்குகிறது. உடற்பயிற்சியும் செய்வதில்லை.

oatsமாறாக வாக்கிங் என்ற பெயரில் அன்ன நடை போடுகின்றனர். சிலர் அன்ன நடை போட்டாலும் கூட வாயில் எதையாவது போட்டு கொரித்தபடி செல்கின்றனர். இல்லை பிரேக் எடுத்துவிட்டு டீ, காபி, வடை, போன்டா என ஒரு வெட்டு வெட்டுகின்றனர். அப்படின்னா தொப்பை எப்படித்தான் குறையும்? இதற்கு ஒரே வழி அதுவும் சிறந்த வழி இருக்கு. இரவில் மட்டும் நீங்க ஓட்ஸ் கலந்த உணவை சாப்பிடுங்க.

அதுல நார்ச்சத்து அதிகம். உங்களுக்குத் தேவையான எனர்ஜியும் கிடைக்கும். இதை தினமும் ஒருவேளையாவது எடுத்துக் கொள்வது நல்லது. புரோட்டீன், கால்சியம், கார்போஹைட்ரேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜின்க், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவை உள்ளன. இது சீக்கிரம் செரிமானம் ஆகாது.

ஆனால் செரிமானத்துக்கு மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பைக் கரைத்து விடும். குடலில் உள்ள அழுக்குகளை நீக்கும். இதில் இட்லி, உப்புமா செய்தும் சாப்பிடலாம். அதே நேரம் நம்மால் செய்வதற்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால் சீக்கிரமே நீங்க ஸ்லிம்மாகி அழகாக மாறிவிடலாம்.