தொப்பையா இருந்தா இளம் வயதினர் ரொம்பவே ஃபீல் பண்ணுவாங்க. அவங்களுக்கு அப்படி விழாம இருக்க என்ன செய்யணும்னு தெரியுமா? சாப்பிடும்போது கண்டிப்பவா இதை ஃபாலோ பண்ணுங்க.
உண்ணும் உணவு உமிழ்நீருடன் அரைக்கப்பட்டு உணவு குடலுக்குள் செலுத்தப்படுகிறது.அங்கே உண்ணப்பட்ட உணவு ஏற்கனவே உணவுடன் கலந்துவரும் உமிழ்நீருடன் சேர்ந்து செரிமானமாவதற்காக செரிமான திரவங்கள் (or) அமிலங்கள் இருக்கும்.
நாம் உண்ணும் சமயமோ அல்லது உணவு உண்டுமுடித்த உடனே நீரை அதிகமாக குடித்தால் செமிப்பதற்கு தேவையான அமிலங்கள் நீர்த்து விடும். அதனால் செரிமானக்குறைவுகள் ஏற்படும்.அதனால் தான் உணவுடனோ,அல்லது உணவு உண்டுமுடித்த உடனேயே அதிகளவு நீரை குடிக்கவேண்டாம் என்கின்றார்கள்.
அவ்வாறு அதிகளவு நீரை குடித்தால் தொப்பை விழும் அபாயமும் உண்டு.தொப்பை வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஒவ்வொரு முறை உணவு உண்டு முடித்தவுடன் நீரை அருந்தி ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். மேலும் இருவேளை உணவு உண்டவுடன் குளிர்பானம் அருந்தினால் இன்னும் விரைவில் தொப்பை கண்டிப்பாக அதிகரிக்கும்.
மேலும் பசி எடுத்து அதிகநேரமாகியும் உணவருந்தாவிட்டால் உணவை செரிக்க தயாராக இருக்கும் அமிலங்கள் உணவு குடல்களையும், அதன் பாதைகளையும் பாதிப்பது தான் நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவை. அதனால் உணவை அதனதன் நேரத்தில் சாப்பிடுங்கள்.சிறிதளவு நீர் உணவுக்கு முன்னும், உணவுக்கு பின்னும் எடுத்துக்கொள்ளுங்கள். உணவுக்கு பின்னர் குளிர்பானங்கள் தவிருங்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



