உடல் எடையைக் குறைக்கணுமா? அதுக்கு இதுதான் சூப்பர் உணவு!

இன்னைக்கு பலரும் வாய்க்கு ருசியா வக்கனையா சாப்பிட்டு விட்டு அப்புறம் ஐயய்யோ குண்டாயிட்டோமே… இனி நம்மை யாரு பார்ப்பான்னு வருத்தப்படுவாங்க. அப்படிப்பட்டவங்க கவலையை விடுங்க. இதோ சூப்பர் டிப்ஸ். குண்டா இருக்குறவங்க இந்த உணவை…

obisity

இன்னைக்கு பலரும் வாய்க்கு ருசியா வக்கனையா சாப்பிட்டு விட்டு அப்புறம் ஐயய்யோ குண்டாயிட்டோமே… இனி நம்மை யாரு பார்ப்பான்னு வருத்தப்படுவாங்க. அப்படிப்பட்டவங்க கவலையை விடுங்க. இதோ சூப்பர் டிப்ஸ்.

குண்டா இருக்குறவங்க இந்த உணவை செய்து சாப்பிடுங்க. இது தேவையில்லாத கொழுப்பைக் கரைக்கும். சர்க்கரை நோயாளிகளும், குழந்தைகளும் கூட இந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம். அது என்ன உணவு என்கிறீர்களா? திணை பச்சை பயறு கஞ்சிதான். எப்படி செய்யணும்னு பார்க்கலாமா…

தேவையானவை: திணை அரிசி – 1 கைப்பிடி, உடைச்ச பாசிப்பயிறு – 1 கைப்பிடி, மிளகு – 1ஃ4; டீஸ்பூன், வெந்தயம் – 1ஃ4; டீஸ்பூன், சீரகம் – 1ஃ2 டீஸ்பூன், இஞ்சி – அரை இன்ச், பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – சிறிது, தண்ணீர் – 4 கப், உப்பு, தேங்காய் – 2 சில்லு, கொத்தமல்லி – சிறிது, தேங்காய் – தேவைக்கேற்ப.

செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் திணை அரிசி, பாசிப்பயறு எடுத்து நல்லா கழுவி அதுல 1 கப் நீரை ஊற்றி அரை மணி நேரம் ஊற விடுங்க. அப்புறம் மிளகு எடுத்து நல்லா உரல்ல இடிச்சி அதை எடுத்து ஒரு தட்டுல வைங்க. அப்புறம் இஞ்சி, பூண்டு உரல்ல இடிச்சி தனியா வைங்க. குக்கரை அடுப்புல வச்சி வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கணும்.

அதுல இடிச்ச இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்க. அப்புறம் மிளகுத்தூள் சேர்த்து வதக்குங்க. அப்புறம் ஊற வச்ச திணை அரிசி, பருப்பு சேர்த்து வறுக்கணும். அப்புறம் அதுல 4 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து குக்கர்ல வச்சி மிதமான தீயில் வேகவிடுங்க. 4 விசில் வந்ததும் இறக்குங்க.

அப்புறம் மிக்சர் ஜார்ல தேங்காய், நீர் ஊற்றி நல்லா அரைச்சிடுங்க. அதை வடிகட்டி பால் எடுங்க. அதைக் குக்கரில் வேகும் பருப்பு, திணைஅரிசி கலவையில் ஊற்றிக் கொதிக்க விடுங்க. அப்புறம் கொத்தமல்லியைத் தூவி விடுங்க. இப்போ சுவையான திணை பச்சைப்பயறு கஞ்சி தயாராயிடும்.