40 வயதைக் கடந்தவரா நீங்கள்? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!

40வயதைத் தாண்டினால் பலருக்கும் முதுமை கவலை வந்துவிடும். முதியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் அப்படித்தானே ஆவோம். அந்த நிலையில் என்ன செய்வது? நம் உடல்நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த வகையில்…

above 40

40வயதைத் தாண்டினால் பலருக்கும் முதுமை கவலை வந்துவிடும். முதியவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நாமும் அப்படித்தானே ஆவோம். அந்த நிலையில் என்ன செய்வது? நம் உடல்நிலை எப்படி இருக்கும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த வகையில் 40 வயதைக் கடந்தால் என்னென்ன செய்வதுன்னு பார்க்கலாம்.

முதலில் நாம் 5 விஷயங்களை மறக்க வேண்டும். வயது, கடந்த காலம், கவலைகள், மது, புகை, மாது, சூது, அடுத்தவர்களைப் பார்த்து அவர்களைப் போல நாம் இல்லையே என ஏங்குவது, அதற்காக அதை அடைய வீணாக முயற்சிப்பது ஆகியவற்றைக் கைவிட வேண்டும். உங்களுடைய தகுதி எது என்று உங்களுக்குத் தெரியும். அதற்கேற்ப முன்னேற முயற்சி செய்யுங்கள்.

அல்லது திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவுதான் பலவீனமாக இருந்தாலும் அல்லது எவ்வளவு தான் வலிமையாக இருந்தாலும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள் உள்ளது. அவை, உங்களை உண்மையாக நேசிக்கும் நண்பர்கள், அக்கறையுள்ள குடும்பம், நேர்மறை எண்ணங்கள். அதே போல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமாக இருக்கும்.

அதற்கு முதலில் பாடத் தெரிகிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களையாவது ராகத்துடன் பாட வேண்டும். அதைப் போல நம் உடலில் உள்ள மனஅழுத்தம் குறைய தனிமையாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆடுங்கள். வாரத்துக்கு ஒரு முறையாவது ஒரு நேரமாவது உண்ணாவிரதம் இருங்கள். தினமும் உடற்பயிற்சியைத் தவறாமல் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது மலையேற்றம் செய்யுங்கள். முக்கியமாக உடல் எடையைக் குறைக்க ஆர்வம் காட்டுங்கள்.

முக்கியமாக பசி எடுத்தால்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்காதீர். தூக்கம் வரல. அதனால முழிச்சி இருக்கேன்னு சொல்லாதீங்க. இரவில் வழக்கமான நேரத்துக்குப் படுக்கைக்குச் சென்று விடுங்கள். சோர்வு இல்லையே. எனக்கு எதுக்கு ரெஸ்ட்டுன்னு நினைச்சி உடலை வருத்தி வேலை செய்யாதீர். ரெஸ்ட் எடுக்கணும்னு தோணுச்சுன்னா அதுக்கான நேரத்தை ஒதுக்கி எடுங்க. உடல்நிலை சரியில்லன்னா தானே மருத்துவப் பரிசோதனை செய்யணும். இப்ப எதுக்கு வீண் செலவுன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு உடல்நிலையில் சந்தேகம் இருந்தால் முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்வது மிகவும் நல்லது.