இன்றைய காலத்தில் எல்லா பக்கமும் பாஸ்ட் புட் மயமாகிவிட்டது. முந்தைய காலம் போல் இல்லாமல் எல்லாருமே சத்தான உணவுகளை தான் சாப்பிடுகிறோம் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கெடுதலான உணவுகள் தான் பலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளம் தலைமுறையினர் கூட பாஸ்ட் புட் மோகத்தில் தான் இருக்கிறார்கள்.
இதன் விளைவாக இளம் வயது மரணங்கள் பலவித நோய்கள் ஏற்படுகிறது. இயற்கையாக ஏற்பட்டது போக இவர்கள் செயற்கையாக சாப்பிடுவதன் மூலம் நோய்களை ஈர்க்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதுபோல பெண்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கக்கூடிய ஒரு நோய்தான் எலும்பு புரை நோய். இது எதனால் வருகிறது இதை தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
பெண்கள் 40 வயதை கடந்தவர்கள் மாதவிடாய் காலம் அவர்களுக்கு முடியும் நேரத்தில் தான் இந்த எலும்பு புரை நோய் தாக்குவதற்கான அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 40 வயதை கடந்து மாதவிடாய் நிற்கும் நேரத்தில் ஹார்மோனில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படும். இது அவர்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும். அதனால் இந்த எலும்பு புரை நோய் வரலாம் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களும் இருக்கின்றது. எலும்பு வளர்ச்சி என்பது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் அது தொடர்பு கொண்டே செல்வது. அந்த வளர்ச்சி ஒரு கட்டத்திற்கு பிறகு நின்ற பிறகு எலும்பு முறிய ஆரம்பிக்கும். அதுவே இந்த நோய்க்கு வழிவகுக்கும். இந்த நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் எலும்புகளில் வலி கீறல்கள் போன்றவைகள் ஏற்படும்.
இதை தடுக்கும் வழிமுறைகளாக பார்க்கப்படுவது பெண்கள் 30 வயதை கடந்த பிறகு அவர்கள் 45 வயது வரை தங்களது வாழ்கை முறையை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். யோகா நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்கான உணவுகளை பார்த்து சாப்பிட வேண்டும். இப்படி தங்கள் உடல்நிலை அக்கறை கொண்டு நல்ல ஒரு வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இந்த எலும்பு புரை நோய் வராமல் அதில் இருந்து தப்பிக்க இயலும்.