மது அருந்த தூண்டும் நடிகைகள்! விளம்பரத்தால் வந்த சர்ச்சை!!

திரையுலகில் வலம் வரும் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து விளம்பர படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல முன்னணி நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளனர். நடிகர்கள் விளம்பர செய்வதால் அந்த பொருள் விற்பனையாகும் என்பதாலும், ஒரு விளம்பர படத்திற்கு அதிக சம்பளம் கிடைப்பதாலும் நடிகர்கள் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. தங்களுக்கு பிடித்த நடிகர் கூறுகிறாரே என மக்களும் அந்த பொருட்களையோ அல்லது முதலீட்டு நிறுவனத்திலோ பணத்தை முதலீடு செய்து அதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அந்த விளம்பரத்தில் நடித்த நடிகருக்கு தான் சிக்கல் உண்டாகும். அந்த வகையில் நடிகை தமன்னா ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

கமல் கதையில் நடிக்கும் விக்ரம்! வேற லெவல் கூட்டணி!!

தற்போது மேலும் இரண்டு இளம் நடிகைகள் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்கள். இதுவரை தங்களது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் அழகுசாதன பொருட்களை மட்டும் விளம்பரப்படுத்தி காசு பார்த்து வந்த நடிகைகள் ஹன்சிகா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் தற்போது மதுபானங்களை விளம்பரப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அஜித்துக்கு சிவா என்றால் விஜய்க்கு அட்லி! நான்காவது முறையாக இணையும் காம்போ!!

இவர்கள் நடிக்கும் படங்களில் மட்டும் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்துவிட்டு, மதுவிற்கு ஆதரவாக இவர்கள் விளம்பரம் செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் நடிகைகள் இருவரும் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிளாசில் மது ஊற்றுவது போன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை குடிக்க தூண்டுவதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

வடிவேலுக்காக எழுதிய கதையில் நடித்து ஹிட் கொடுத்த விஜய்!

ஹன்சிகா தற்போது அவரது 50வது படமான மஹா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல் பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவதால் படத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஒரு சிலர் கூறி வருகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.