தளபதி 69 படத்தை நெல்சன் இயக்கினால்!.. இத்தனை மல்டி ஸ்டார் இருப்பாங்களா?.. அவரே சொல்லிட்டாரே!…

நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் தளபதி 69 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் எனக்கு கிடைத்தால் என்ன பண்ணுவீங்க என்கிற கேள்விக்கு முதலில் அது நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்.

தளபதி 69 படத்தை நெல்சன் இயக்கினால்?:

ஆனால் ஒரு வேலை நடந்தால் எந்த எந்த நடிகர்களை நடிகர் விஜய்க்கு நண்பர்களாக கொண்டு வருவீர்கள் என தொகுப்பாளர் ஆர் ஜே விஜய் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நெல்சன், தளபதி 69 படத்தை தான் இயக்கினால் தளபதி விஜய்க்கு உதவும் நண்பர்களாக கண்டிப்பாக மகேஷ்பாபு சாரை கொண்டு வருவேன், அப்படியே மலையாளம் பக்கம் பார்த்தால் மம்மூட்டி சார், பாலிவுட் பக்கம் போனால் ஷாருக்கான் சார் என பெரிய லிஸ்டை சொல்ல இப்படி ஒரு படமாக தளபதி 69 படம் இருந்து விடக் கூடாதா என ரசிகர்கள் பலரும் நெல்சனுக்கு தளபதி விஜய் இன்னொரு வாய்ப்பை கொடுத்தால் நல்லா இருக்கும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. மேலும் நடிகர் விஜய் நடித்த படங்களிலேயே அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்ட படமாக பீஸ்ட் மாறியது.

அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கும் போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழவில்லை. கடைசியாக அனிருத் இசை மற்றும் தமன்னாவின் காவலா டான்ஸ் படத்தை தூக்கி நிறுத்த படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியது.

லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மிது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வைத்து வரும் நிலையில், ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கி வரும் கூலி திரைப்படம் வெளியானால் மீண்டும் லோகேஷ் கனகராஜ் மவுசு அதிகரிக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...